வணக்கம்!
பல பதிவுகளில் இதனைப்பற்றி சொல்லிருக்கிறேன். பல இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர். நாற்பது வயது தொட்டவர்கள் கூட திருமணம் ஆகாமல் இருக்கின்றனர்.
இவர்களை கேட்கும்பொழுது இன்னுமும் லைப் செட்டாகவில்லை அதனால் அப்படியே இருக்கின்றேன் என்கிறார்கள். ஒரு சிலர் நான் நினைத்த பதவியை அடையவில்லை என்பதற்க்காக இப்படியே இருக்கின்றேன் என்கிறார்கள்.
நீங்கள் நினைப்பது போல் ஆகவேண்டும் என்றால் வயது மேலே போய்விடும் அதன் பிறகு நடந்தால் என்ன நடக்காமல் இருந்தால் என்ன என்று இருந்துவிடவேண்டியது தான். பணம் சம்பாதித்த பிறகு தான் திருமணம் என்றால் பணம் சம்பாதித்த பிறகு உங்களுக்கு இருப்பது இளமை கிடையாது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
இருபத்தைந்து வயதுக்குள் ஆண்களாக இருந்தால் திருமணத்தை நடத்திவிடுங்கள். பணம் பதவி வந்தபிறகு தான் திருமணம் என்ற பேச்சு வேண்டாம். முடிந்தளவுக்கு இளைமையில் திருமணம் செய்துவிடுவது நல்லது.
பணம் எல்லாம் சம்பாதித்து முடித்த பிறகு யார்க்காக சம்பாதிக்கிறோம் என்று நீங்கள் நினைப்பீர்கள். அதனால் திருமணத்தை முன்கூட்டியே செய்துவிடுங்கள். ஆன்மீகத்திற்க்கும் திருமணத்திற்க்கும் தடை என்பது எல்லாம் கிடையாது. இல்லறத்தில் இருந்துகூட நல்ல முறையில் ஆன்மீகத்தில் இருக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment