வணக்கம்!
ஒருவராக நீங்கள் கோவிலுக்கு சென்றுவாருங்கள். நீங்கள் ஒருவராக கோவிலுக்கு செல்லும்பொழுது உங்களுக்கு அந்தளவுக்கு பாதிப்பு வராது.
பத்துபேரின் ஜாதகத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் அவர்களுக்கு எல்லாம் அர்ச்சனை செய்கிறேன் என்று சென்று பாருங்கள். கோவிலுக்கு செல்லமுடியாதபடி அந்தளவுக்கு தொந்தரவை கொடுக்க ஆரம்பிக்கும். கோவிலுக்கு ஒழுங்காக சென்று வரமுடியாது.
ஏன் என்றால் அடுத்தவர்களின் கர்மாவை சுமந்து செல்லுபவர்களாக செல்லும்பொழுது நிறைய பிரச்சினையை நீங்கள் எதிர்கொள்ளவேண்டும். இப்படி தான் எனக்கு பரிகாரம் செய்யும்பொழுதும் ஏற்படும் ஆனால் நமது அம்மன் அருளால் இது அனைத்தையும் எளிதில் எடுத்துவிடும்.
எல்லாேருக்கும் சொல்லுவது உங்களின் குடும்ப ஜாதகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அடுத்தவர்களின் குடும்பத்தின் ஜாதகத்தை அல்லது நண்பர்களின் குடும்பத்தின் ஜாதகத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை வந்துவிடும்.
நிறைய பிரச்சினையை எதிர்க்கொள்ளாமல் இருப்பதற்க்கு வழிதான் மேலே சொன்ன ஒரு விசயம். அதனையும் நீங்கள் கடைபிடித்தால் நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
உங்கள் வாட்ஸ்அப் எண் கொடுங்கள்.ஜாதகம் வாட்ஸ்அப் ல் அனுப்பலாமா??
Post a Comment