வணக்கம்!
சனிக்கிரகத்திற்க்கு என்று பரிகாரம் நிறைய பரிந்துரைக்கின்றனர். இதில் அதிகம் இடம்பெறுவது பைரவரை வணங்குங்கள் என்று சொல்லுவார்கள். பைரவரை வணங்கும்பொழுது உங்களுக்கு சனியின் பாதிப்பு குறையும் என்பது ஒரு சாதாரண சோதிடர் முதல் புகழ் பெற்ற சோதிடர் வரை சொல்லும் பரிகாரம்.
சனி என்றாலே தாழ்ந்தப்பட்ட சமுதாயத்தை குறிக்கும் கிரகம். தாழ்ந்தப்பட்ட சமுதாயத்தினர் வணங்கும் கடவுள் வைரவர். பெரும்பாலும் இது பைரவர் போல உள்ள கடவுள் தான். இருவரும் ஒருவரே என்று தான் சொல்லுவார்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து கோவில் கட்டினால் அதற்கு வைரவசுவாமி என்ற பேரோடு அந்த கோவில் விளங்கும். பல பகுதியில் நான் நேரில் சென்று பார்த்து இருக்கிறேன். வைரவன் கோவில் என்ற பேராேடு இருக்கும்.
வைரவன் கோவிலில் சிலை வழிபாடு எப்படி இருக்கும் என்றால் சிமெண்ட் கொண்டு சிலை வடித்து இருப்பார்கள். அதிகப்பட்சம் இப்படி தான் செய்து இருக்கிறார்கள். கலர் பெயிண்ட் அடித்து அந்த சிலை இருக்கும்.
சனிக்கிரகத்திற்க்கு சொல்லும் பைரவர் சிவன் கோவிலில் இருப்பார். தமிழ்நாட்டில் தாழ்ந்தப்பட்டவர்கள் அதிகம் சிவன் கோவிலுக்கு செல்லுவதில்லை. தற்பொழுது டிவியை பார்த்து தான் சிவன் கோவிலுக்கு எல்லாம் செல்லுகின்றனர். அதுவும் நகர்புறத்தில் மட்டும் இந்த பழக்கம் இருக்கின்றது. கிராமபுறங்களில் இந்த பழக்கம் அதிகம் இருப்பதில்லை.
சனிக்கிரகத்திற்க்கு பரிகாரம் நாம் தாழ்த்தப்பட்டவர்கள் கட்டிய வைரவன் கோவில் சென்று வணங்கினால் சனிக்கிரகத்தின் பாதிப்பு குறையும். சிவன்கோவிலில் உள்ள பைரவரை சென்று வணங்கினால் சனியின் பாதிப்பு குறையாது.
வைரவன் கோவிலில் அஷ்டமிக்கு எல்லாம் பூஜை செய்யமாட்டார்கள். வருடத்திற்க்கு ஒரு முறை கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள். அந்த நேரத்தில் வேண்டுமானால் வணங்கலாம். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் ஏதாவது ஒரு தாழ்த்தப்பட்டவர் சென்று அந்த கோவிலில் விளக்கு ஏற்றி ஊதுவத்தி ஏற்றிவிட்டு வருவார். வேண்டுமானால் அதனை வாங்கி அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் செய்வார்கள். உங்களுக்கு சனியின் பாதிப்பு குறையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment