Followers

Friday, March 3, 2017

வழிகாட்டி


ணக்கம்!
          ஒருவர் நம்மை தேடிவந்தால் அவருக்கு நம்மிடம் ஒரு சக்தி இருக்கின்றது என்பதை பலவிதத்திலும் காட்டிக்கொடுத்து இருக்கிறோம். அதில் ஒரு நிகழ்வு ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று பல விசங்கள் நடந்திருப்பதை உணரவைத்திருக்கிறேன். இப்படி பல அனுபவங்கள் இருக்கின்றன. இது நம்மை பெருமைப்படுத்திக்கொள்ள இதனை சொல்லவில்லை இது அனைத்தும் எனது முன் உள்ள குருவை சாரும்.

ஒரு குரு மட்டுமே உயிரோடு இருக்கிறார். மீதி உள்ளவர்கள் அனைவரும் சூட்சமத்தில் தான் இருக்கின்றனர். அவர்கள் தனக்கு வழிகாட்டுகிறார்கள் என்று சொன்னால் அது தான் உண்மை. கண்டிப்பாக என்னிடம் உள்ள விசங்கள் அனைத்தும் இந்த குருக்கள் தான் சொல்லிக்கொடுத்து வழிநடத்துக்கின்றனர்.

நான் சொன்னதுபோல உங்களுக்கு ஒரு வழிகிடைக்கிறது என்றால் உங்களுக்கு முன்னோர்கள் இருந்து வழிகாட்டுகின்றனர். அதாவது உங்களின் குடும்பத்தில் இறந்த நபர்கள் யாரோ ஒருவர் அல்லது பலர் உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.

இந்த வழிகாட்டுதல்கள் மட்டும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு நல்ல வழியை கண்டிப்பாக தேர்ந்தெடுக்கமுடியாது. நம்மோடு குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசியும் நமது குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும்பொழுது நமக்கு வழிகாட்ட ஒரு ஆள் கிடைப்பார்கள்.

வழிகாட்டியை வைத்து தான் உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கமுடியும். வழிகாட்டி சரியான ஆளாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: