வணக்கம்!
ஆன்மீகபயணம் தொடங்கிய நாள்களில் இருந்து சித்தர்களை பற்றி அறிந்துக்கொள்ளகூடிய வாய்ப்பை அந்த சித்தர்களே கொடுத்ததால் அவர்களின் அருளை பெறமுடிந்தது.
இன்று பல்வேறு நாடுகளிலும் பல்வேறு இடங்களிலும் என்னை தேடி வருபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதற்க்கு அம்மன் அருள் மற்றும் குருவின் அருளோடு பல சித்தர்களின் அருளும் இருப்பதால் தான் அது நடக்கிறது.
இன்று நம்மை தேடி வருபவர்களுக்கு அவர்களுக்கு ஏதோ ஒரு நல்லது நடந்துவிடவேண்டும் என்ற மனநிலை எனக்கு கொடுத்து அதனை நடத்தியும் கொடுக்கிறார்கள்.
பணத்தை எதிர்பார்க்காமல் நடத்திக்கொடுக்கும் ஒரு மனநிலையை எனக்கு கொடுத்ததே சித்தர்களின் அருளால் மட்டுமே சாத்தியப்படுகிறது. என்னை ஏமாற்றுபவர்கள் மற்றும் எதிர்ப்பர்களை எல்லாம் எந்தவிதத்திலும் நான் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதற்க்கும் சித்தர்கள் கொடுத்த அந்த நல்ல பழக்கம். மனிதனுக்கு தேவையானதை கொடு. மனிதன் கொடுப்பதை எதிர்பார்த்து செய்யாதே என்பது தான்.
என்ன சித்தர்களைபற்றி எழுதுவார் என்றால் இந்த பதிவில் இவரை பற்றி எழுதிக்கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கலாம். நான் சித்தர் கிடையாது சித்தர்கள் கொடுத்த நல்ல விசயத்தை உங்களிடம் தெளிவாக சொல்லுவதற்க்கு என்னை உதாரணமாக எடுத்துக்கொண்டு சொன்னேன்.
சித்தர்களின் அருள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் பிறர்க்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிறைய செய்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கைக்கு நிறைய பாடுபடுவீர்கள் என்பதால் தான் சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment