வணக்கம்!
சூரியன் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர்க்கு தந்தை அனுகூலமாக இருப்பார். தந்தை அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து நிறைய சொத்தை சேர்த்து வைத்துக்கொடுப்பார்.
சூரியன் நன்றாக இருந்தால் தந்தையை மட்டும் சார்ந்து இருக்கும் ஒரு சூழ்நிலை உருவாகும். பையன் வாழ்வில் வெற்றிபெறுவதில்லை. ஊதாரியாக வாழ்க்கையை ஓட்டுபவர்களாக இருந்துவிடுவார்கள்.
கை நிறைய பணம் இருக்கின்றது. சொத்து இருக்கின்றது என்று வீணாக காலத்தை தள்ளிவிட்டு திருமணத்திற்க்கு பிறகு நிறைய கஷ்டப்பட்டவர்களை நான் பார்த்து இருக்கிறேன்.
தந்தையாக இருப்பவர்களிடம் சொல்லுவது எல்லாம் நிறைய சம்பாதியுங்கள் சொத்து சேர்த்து வையுங்கள் ஆனால் அதனை பையன் எப்படி கையாளவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுங்கள்.
தான் வாழாத ஒரு வாழ்க்கையை தன் பிள்ளைகள் வாழவேண்டும் என்று ஆசைபடுவது நல்லது தான் ஆனால் அதனை எப்படி வாழவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பது நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment