Followers

Friday, March 31, 2017

சந்திரன் பரிகாரம்


ணக்கம்!
          சந்திரன் பரிகாரம் நாம் செய்தாலும் அதோடு நீங்கள் ஒரு சில விசயங்களையும் செய்யுங்கள். சந்திரன் என்றாலே நீர் சம்பந்தப்பட்ட காரத்துவத்திற்க்கு காரகம் வகிக்கிறார்.

புண்ணியநதிகளில் நாம் நிறைய நீராடினால் நமக்கு வருகின்ற பிரச்சினை தீரும். வருடத்திற்க்கு ஒரு முறையாவது புண்ணிய நீராடல் மிக மிக முக்கியமான ஒன்று. கடல் அல்லது நதிகளில் நீராடுவது புண்ணியம் தரும். சந்திரனுக்கு நல்ல பரிகாரமும் இது.

வருடம் ஒரு முறை இராமேஸ்வரம் சென்று நீராடிவிட்டு வரலாம். இராமேஸ்வரம் சென்றால் நிறைய புண்ணியதீர்த்தங்களையும் நீராடுவது வாய்ப்பு கிடைக்கும். 

எங்கு எல்லாம் உங்களால் நீராட முடியுமோ அங்கு எல்லாம் நீங்கள் நீராடிவிடுங்கள். புண்ணியநதிகள் கூட கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களின் ஊருக்கு அருகில் கடல் இருந்தால் அதில் கூட நீங்கள் நீராடிவிட்டு வந்துவிடலாம்.

கடலில் நீராடுவது மிக மிக நன்மை பயக்கும். உங்களின் சூட்சமஉடல் பாதுகாக்கப்படும். சந்திரன் பரிகாரம் செய்ய நாம் ஆயத்தமாக போகின்றோம். இந்த வேளையில் நீங்கள் மேலே சொன்னது போல் ஒரு முறை செய்துக்கொள்ளலாம்.

இராமேஸ்வரத்தில் 1996 ஆம் வருடம் சென்றேன். அப்பொழுது ஒரு சாஸ்திரிகளிடம் ஒரு பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நல்ல வயதானவர் மிக அருமையாக பூஜைகளை செய்தார். அவர் தற்பொழுது இல்லை. அப்பொழுதே அவர்க்கு நல்ல வயதாகிவிட்டது.

வருடத்திற்க்கு ஒரு முறை அங்கு சென்று நம்முடைய பாவத்தை எல்லாம் போக்கிக்கொள்ளலாம். அங்கு பூஜை செய்யும்பொழுது அவர்களே நிறைய சொல்லுவார்கள். நாம் நடக்கும்பொழுது நமது காலடிப்பட்டு எறும்புகள் செத்துவிடும். அந்த எறும்பின் பாவத்தை போக்க கூட இங்கு பூஜை செய்யும்பொழுது சொல்லுவார்கள். தற்பொழுது எல்லாம் அந்தளவுக்கு செய்வதில்லை என்று நினைக்கிறேன். 

நீங்கள் நமக்கு தெரியாத செய்ய பாவத்தை எல்லாம் போக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு அங்கு நீராடிவிட்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: