Followers

Sunday, March 19, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          ஒரு சில சித்தர்கள் ஒருவரிடம் வந்து இறங்கி அவர் அந்த சித்தர்களின் வழியாக அருள்வாக்கு சொல்லுவார்கள் என்று நம்ம ஊரில் நிறைய பிரபலமாக இதனை நீங்கள் பார்த்து இருக்கலாம். போர்டு வைத்து விளம்பரம் செய்து இதனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கலாம் அல்லது பார்த்து இருக்கலாம்.

சித்தர்கள் வந்து அருள்வாக்கு சொல்லுகிறார் என்றால் எப்படி இருக்கும். அருள்வாக்கு சொல்ல விளம்பரமே தேவையில்லை சித்தர்களே கூட்டத்தை கூட்டிவிடலாம். இதனையும் ஒரு தொழிலாக செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

போகர் என்னுடைய ஆத்மாவில் வந்து இறங்கி சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று பல இடங்களில் நானே பார்த்து இருக்கிறேன். ஒரு ஆத்மாவில் வந்து அடுத்த ஆத்மாவை செலுத்தமுடியும் என்று சித்தர்கள் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் குறிசொல்ல தான் வந்து இருக்கின்றார்கள் என்று நம்ம ஆளுங்கள் விடும் கதை தான் நம்பமுடியவில்லை.

இந்த பூமியில் அவசியமாக ஏதோ ஒன்று செயல்படுத்தவேண்டும் என்றால் மட்டுமே அவர்கள் இந்த வேலையை செய்வார்கள். அதுவும் அது அடுத்தவர்களுக்கு தெரியவே தெரியாமல் செய்துவிட்டு போய்விடுவார்கள் என்பது மட்டும் தான் உண்மை. நம்ம ஆளுங்க சொல்லுவது போல் கிடையாது.

ஒரு செயலை இந்த பூமியில் கண்டிப்பாக செய்யவேண்டும் என்ற ஒரு நிலை ஏற்படும்பொழுது மட்டுமே இந்த பூமியில் சித்தர்கள் மனிதனுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படிப்பட்ட சித்தவிளையாட்டை செய்கின்றனர்.

நிறைய கருத்துக்கள் இதனைப்பற்றி எழுதபோகிறேன். இனி வரும் பதிவுகளில் நாம் பார்க்கலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

எழுதுங்கள்.மக்கள் சிந்திக்கட்டும்.