Followers

Thursday, March 23, 2017

நல்ல காலத்திற்க்கு காத்திருக்கவும்


ணக்கம்!
          ஒரு சில நேரத்தில் ஏதோ ஒன்றுக்கு முயற்சி செய்வோம். அந்த முயற்சி செய்தால் அந்த நேரத்தில் கடுமையான ஒரு எதிர்ப்பு வரும். நம்மால் அதனை செய்யவே முடியாது.

இப்படிப்பட்ட நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்றால் இதனை கொஞ்சம் விட்டுவிட்டு பிற விசயத்தில் கவனத்தை வைக்கவேண்டும். கொஞ்ச நாள்கள் சென்ற பிறகு அந்த விசயத்தில் நாம் கையை வைத்தால் பெரும்பாலும் நமக்கு சாதகமாக அமைந்துவிடும்.

ஒரு சில காரியங்கள் பல தடவை முயற்சி செய்தாலும் தடங்கல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்பொழுது நீண்ட காலம் அதனை தள்ளி வைத்துவிட்டு அதனை தொட்டால் நடக்கும்.

ஒரு சில கிரகங்கள் கடுமையான கோபத்தில் இதனை நம்மீது காட்டுகிறது. அந்த கிரகத்தின் கோபம் குறையும் காலம் வரை நாம் காத்திருந்தால் பெரும்பாலும் நாம் எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுத்துவிடும். நேரம் பார்த்து காயை நகர்த்தும் ஒரு டெக்னிக் இது.

ஒரு சில காலக்கட்டத்தில் பல வருடங்கள் கூட சம்பந்தப்பட்ட கிரகத்தின் தாக்கம் இருக்கும். என்ன செய்வது நமக்கு நடக்கவேண்டும் என்றால் காத்து இருக்கவேண்டியது தான். காத்திருந்து செய்தாலும் காரியம் நடந்துவிடும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: