வணக்கம்!
லக்கினத்தில் சந்திரன் இருந்தால் பெரும்பாலும் அவர்களுக்கு நல்லதை தரும் எண்ணம் இருக்கும். நல்லதை தரும் என்றால் அவர்களால் பிறர்க்கு உதவி கிடைக்கும். பெரும்பாலும் தீயகிரகங்களின் வீட்டில் இருந்தால் கூட அவர்களால் எப்படியாவது பிறர்க்கு உதவி கிடைக்கும் என்று சொல்லலாம்.
சந்திரன் லக்கினத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் அவ்வப்பொழுது தடுமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று. மனசு கொஞ்சம் சஞ்சலப்படுவது உண்டு. ஒரு சில காரிய தடையும் ஏற்படுவது உண்டு.
சந்திரன் பரிகாரம் அறிவித்து பல நண்பர்கள் தன்னுடைய ஜாதகத்தை அனுப்பி வைத்து இருக்கின்றனர். ஜாதககதம்பத்திற்க்கு வரும் நண்பர்கள் எண்ணிக்கை அதிகம். இவர்கள் அனைவரும் அனுப்பி வைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
எதற்க்கு இப்படி சந்திரன் பரிகாரத்திற்க்கு எல்லாம் ஜாதகத்தை அனுப்பவேண்டுமா என்று நினைத்து இருப்பவர்கள் பெரும்பான்மையானர்க்கு சந்திரன் சரியில்லாமல் ஜாதகத்தில் இருக்கும் என்று சொல்லலாம்.
எப்படி சொல்லுகிறேன் என்றால் எந்தவித பிடிப்பும் ஒரு விசயத்திலும் காட்டமாட்டார்கள். தனக்கு என்ன என்கிற மாதிரியான ஒரு எண்ணம் இருந்தால் உங்களுக்கும் சந்திரன் சரியில்லை என்று அர்த்தம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment