வணக்கம்!
நமக்கு ஒரு கிரகம் சரியில்லை என்றால் அந்த காரத்துவத்துவம் உடைய நபர் அல்லது பொருட்கள் நம்மை சுற்றி இருப்பது போல அந்த கிரகங்கள் வைத்துவிடும். ஒன்று அதனை பார்த்து நொந்து போகவேண்டும் அல்லது அதனால் நமக்கு பிரச்சினை வருவது போலவே செய்துவிடும்.
சுக்கிரன் கெடுகின்றது வைத்துக்கொள்வோம். ஒன்று நம்மை சுற்றி பணக்காரர்களாக வைத்துவிட்டு நம்மை ஏழ்மையாக்கிவிடும். அவர்களை பார்த்தே நாம் நொந்து சாகவேண்டும் என்று வைத்துவிடும் மற்றோன்று பெண்கள் இருப்பார்கள் அவர்களால் உங்களுக்கு பிரச்சினை வருவது போலவே இருக்கும்.
இயற்கையே அப்படி உருவாக்கி அதனுள் நாம் வாழ்வது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுகின்றது. இயற்கையே நமக்கு எதிராக இந்த சூழ்நிலையை உருவாக்கிவிடும். நாம் அதனுள் சிக்கி தொலையவேண்டியதாகிவிடும்.
பெரும்பாலும் ஆன்மீகவாதிகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அந்த சூழ்நிலையை மனதிற்க்குள் அனுமதிக்க மாட்டார்கள். சூழ்நிலையில் வாழ்வார்கள் அந்த சூழ்நிலை மனதிற்க்குள் வரவே வராது.
ஒரு சாதாரண நபருக்கு இப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் அப்புறம் அதனால் செத்து சீரழிந்துக்கொண்டு இருப்பார்கள். பொறுமையாக உங்களுக்குள் மனதிற்க்குள் வாங்கி இது எதனால் நடக்கின்றது என்று பார்த்தால் உங்களுக்குள் தான் இவ்வளவு பிரச்சினை என்பது தெரியவரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
உண்மை உண்மை உண்மை.................................................................
Post a Comment