Followers

Monday, April 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          அம்மன் பூஜை மாதந்தோறும் நடைபெறும். கண்டிப்பாக அம்மன் பூஜையை ஒவ்வொரு மாதமும் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன். கோவில் கட்ட போகிறோம் என்றவுடன் அம்மன் பூஜை இனிமேல் கிடையாதா என்று கேட்டார்கள். ஒவ்வொரு மாதமும் அம்மன் பூஜை உண்டு. அம்மன் பூஜையை நடத்துவதால் தான் இப்படிப்பட்ட நிலைக்கு வந்து இருக்கிறோம் அதனை நிறுத்தப்போவதில்லை. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.

இந்த மாதமே நம்முடைய அம்மன் கோவில் கட்டும்பணி ஆரம்பிக்க வேண்டும் என்ற திட்டத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். ஜாதக கதம்பத்தில் உள்ள நண்பர்கள் தான் இதற்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். அனைவரும் ஒத்துழைப்பை தாருங்கள் என்று அன்போடு வேண்டுகோள் கேட்டுக்கொள்கிறேன்.


நிறைய பதிவுகளில் வீட்டை பராமரிப்பை பற்றி சொல்லிருக்கிறேன். அதே நேரத்தில் வீட்டில் ஒவ்வொரு பொருட்களும் இடம் மாற்றம் செய்தால் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். ஒரு சோபா ஒரு இடத்தில் போட்டு இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் ஏதோ ஒரு காரணத்தால் அந்த சோபாவை இடம் மாற்றினால் என்ன நடக்கின்றது என்பதை நீங்கள் கவனித்து பார்க்கவேண்டும். 

ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்க்கு மாற்றும்பொழுது கூட ஏதாவது ஒன்று நடக்க ஆரம்பிக்கும். நல்லது நடந்து என்றால் பரவாயில்லை கெட்டது நடந்தால் ஏற்கனவே இருந்த இடத்திலேயே வைத்துவிடவேண்டும். அதனை மாற்றிக்கொண்டே இருக்ககூடாது.

வாடகை வீட்டில் நீங்கள் குடி போகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டிற்க்கு குடி போனதில் இருந்து உங்களுக்கு என்ன நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். உங்களுக்கு நல்லது நடக்கின்றதா அல்லது கெட்டது நடக்கின்றதா என்பதை பார்த்து அதற்கு தகுந்தார்போல நீங்கள் இருக்கவேண்டும். 

ஒரு சில வீட்டிற்க்கு நீங்கள் சென்றதில் இருந்து உங்களுக்கு கெட்டது மட்டுமே வந்துக்கொண்டு இருக்கும். இந்த மாதிரியான வீட்டை தவிர்க்க பார்க்கவேண்டும். வீட்டை காலி செய்துவிட்டு புதிய வீட்டிற்க்கு செல்லவேண்டியது தான். இதனை வீட்டில் உள்ள பெண்கள் தான் கவனித்து உங்களின் கணவரிடம் சொல்லவேண்டும்.

வீட்டில் என்ன என்ன நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்துக்கொண்டே வருவது நல்லது. உங்களின் வளர்ச்சிக்கு இந்த செயல் நல்ல உறுதுணையாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: