வணக்கம்!
தற்பொழுது இருந்து நாளை பிற்பகல் 2:55 வரை அமாவாசை இருக்கின்றது. குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு என்று சிறப்பான பூஜைகளை செய்வதற்க்கு இது ஒரு உகந்த நேரமாக இருக்கும்.
குலதெய்வத்திற்க்கு சென்று ஒரு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வரலாம் அல்லது வீட்டில் பச்சைப்பரப்புதல் செய்து வழிபடலாம். அமாவாசை செய்தால் ஒரு சில குலதெய்வம் நீங்கள் கேட்டதும் கேட்காத பல நல்ல விசயங்களையும் உங்களின் குடும்பத்தினர்க்கு வாரி வழங்கும்.
வீட்டைவிட்டு வெளியிடங்களில் தங்கி வேலை செய்யும் நபர்கள் குலதெய்வம் மட்டும் இல்லாமல் உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள். இன்று மாலை நேரத்தில் கூட சென்று வரலாம்.
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு வழிபாடு செய்யலாம் அல்லது பச்சைப்பரப்புதல் செய்யும்பொழுது அவர்களுக்கு பிடித்த விசயங்களை வைத்து தனி இலையில் போட்டு படைக்கலாம். முன்னோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
எப்படிப்பட்ட தோஷத்தில் பிடிப்பட்டவர்களும் அமாவாசை தோறும் இப்படிபட்ட விசயங்களை செய்து வந்தால் அவர்களுக்கு தோஷம் விலகி நல்லது நடக்க ஆரம்பிக்கும். முடிந்தவரை அமாவாசை சம்பந்தப்பட்ட கோவிலாக இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment