Followers

Wednesday, April 10, 2019

மூன்றாவது வீடு கேது


வணக்கம்!
          மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். முதலாக கேது கிரகம் அங்கு இருந்தால் என்ன என்பதைப்பற்றி நாம் பார்த்துவிடலாம். முதலாக கேது கிரகம் அங்கு அமரும்பொழுது அது தான் பெரியவில் அந்த வீட்டை கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். 

பொதுவாக மூன்றில் அமரும் கிரகம் எதிராக இருக்கும் ஒன்பதாவது வீட்டை பார்த்துவிடுகின்றது. ஒன்பதாவது வீடு மிகச்சிறந்த வீடாக இருக்கின்றது. ஒன்பதாவது வீடு பாக்கியஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது.

பாக்கியஸ்தானத்தை கொடூரமாக ஒரு கிரகம் பார்க்கும்பொழுது அந்த மனிதனுக்கு வருகின்ற அனைத்து நன்மையும் கெட்டுவிடுகின்றது.அதனால் தான் ஒரு மனிதன் வாழ்க்கை வீணாக போய்விடுகின்றது.

கேது கிரகம் மூன்றில் வந்தால் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை தொந்தரவாகவே சென்றுக்கொண்டு இருக்கும். கேதுகிரகம் மூன்றில் வரும்பொழுது ஒன்பதில் இராகு வந்துவிடுகின்றது. பெரும்பாலும் இராகு வேலை செய்கின்றதா அல்லது கேது வேலை செய்கின்றதா என்பது கண்டுபிடிப்பது பெரிய கடினம்.

இராகு கேதுவிற்க்கு பெரும்பாலும் இரண்டும் ஒன்று போலவே செய்கின்றது. இரண்டில் ஒன்று கண்டிப்பாக வேலை செய்து நமது வாழ்க்கையை வீணடித்துவிடுகின்றது. அதற்க்கு தான் பெரும்பாலான இடத்தில் நான் சொல்லுகிறேன். இராகு கேதுவிற்க்கு தகுந்த மாதிரி நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். கேதுவைபற்றி நிறைய விசயங்கள் வரும் பதிவில் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: