வணக்கம்!
ஒருவரின் உடலை காட்டக்கூடிய அமைப்பு லக்கனம். நாம் மூன்றாவது வீட்டில் உள்ள கிரகத்தை பார்க்கும்பொழுது மூன்றாவது வீட்டில் கேது இருந்தால் அவர்க்கு உடல்நிலையில் பாதிப்பு வரும் என்று சொல்லிருக்கிறோம். இது முரண்பாடாக தோன்றலாம்.
லக்கனம் என்பது நம்முடைய உடலை காட்டக்கூடிய ஒரு இடமாக இருந்தாலும் நமது மனதை கா்ட்டக்கூடிய இடம் என்று எடுத்துக்கொண்டால் அது மூன்றாவது வீட்டையும் குறிக்கும். மூன்றாவது வீட்டில் உள்ள கேது மனதை கெடுக்கும்.
ஒருவருரின் மனம் கெட்டால் அவரின் உடலும் பாதிப்படைந்துவிடும். மனதால் உடல் கெடுவது தான் அதிகமாக இருக்கும். மனமும் உடலும் பின்னிபிணைந்த ஒன்று. மனதை போட்டு கேது கெடுக்கும்பொழுது அதுவாகவே உடலும் கெடுவதற்க்கு ஆரம்பித்துவிடும்.
ஜாதகத்தில் உள்ள அனைத்து வீடுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புக்கொண்டவை தான் ஒவ்வொரு வீடும் மிகசரியாக வேலை செய்யும்பொழுது தான் உங்களின் நலமும் நன்றாக இருக்கும். உடல் என்றாலே லக்கனத்தை மட்டும் பார்க்காமல் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பலனை ஆராய்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது வீட்டில் உள்ள கேது மனதில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் உடலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கரமித்துக்கொண்டு அவர்களின் உடல்நலம் மோசமாக போய்விடுவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. உங்களுக்கு இப்படி இருந்தால் உங்களின் மனம் தான் இதனை செய்கின்றது என்று எண்ணி சரி செய்ய நினையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment