Followers

Tuesday, April 30, 2019

செங்கிஸ்கான்


வணக்கம்!
          மங்கோலிய பேரரசை தோற்றுவித்த மன்னன் செங்கிஸ்கானைப்பற்றி தான் மூன்றாவது வீட்டோடு தொடர்புப்படுத்தி சொல்லுகிறேன். தொலைத்தாெடர்பு மற்றும் தைரியத்தை காட்டக்கூடிய ஜாதகத்தில் மூன்றாவது வீட்டோடு தொடர்புப்படுத்தி இவரை சொன்னால் கண்டிப்பாக இந்த வீட்டிற்க்கு பொருந்தும் என்று இதனை சொல்லுகிறேன்.

செங்கிஸ்கானை பற்றி நாம் வரலாற்று புத்தங்களில் படித்து இருக்கலாம். எழுத்தறிவிற்ற ஒருவர் உலகவரலாற்றின் மிகப்பெரிய நிலப்பேராரசை அமைத்தவன் என்று வரலாற்று ஆசிரியர்களையே குழப்பும் மன்னனாக திகழ்ந்தவர். வறுமையில் இருந்து ஒரு பெரிய பேராரசை உருவாக்கியவர் என்றால் இன்றளவும் நான் படித்த மன்னர் வரலாற்றில் இவர் ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.

ஒருவருக்கு நல்ல தைரியத்தை கொடுக்கும் மூன்றாவது வீடு பெரியளவில் படிப்பை கொடுப்பதில்லை என்பதையும் சோதிடவிதியாக உங்களிடம் சொல்லுகிறேன். அனைத்தையும் அனுபவத்திலேயே படித்துவிடுவார்கள்.

செங்கிஸ்கான் படை வருகின்றது என்றால் அனைத்து நாடுகளும் அதுவாகவே சரணடையும் என்று படித்து இருக்கிறேன். திறம்பட படையை நடத்துவதில் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருந்திருக்கிறார். ஒருவரை பார்த்தாலே அவரை எடைபோடும் அளவுக்கு அவரின் மனநிலை இருந்து இருக்கின்றது.

செங்கிஸ்கான் இளம் வயதில் இருந்தே நல்ல ஆன்மீகவாதியாக திகழ்ந்து இருக்கின்றார். ஒவ்வொரு படை எடுப்பு நடக்கும்பொழுதும் ஆன்மீக குறி கேட்டு அதற்கு தகுந்தார்போல் படை எடுப்பை நடத்துவார் என்று படித்து இருக்கிறேன்.

அலெச்சாண்டர் நெப்போலியனை விட சிறந்த ஒரு போர்வீரன் என்று சொல்லலாம். அலெக்சாண்டரிடம் அவர் தந்தை உருவாக்கி கொடுத்த இராணுவம் இருந்தது. நெப்போலியனிடம் நாடு இருந்தது அதனை வைத்து அவர்கள் போர் புரிந்தார்கள். செங்கிஸ்கான் அடிமட்டத்தில் இருந்து உருவாக்கியவர்.

உலகத்தில் முதல் சர்வதேசத் தபால் அமைப்பை ஏற்படுத்தியவர். சோதிடத்தில் மூன்றாவது வீடு தபால் அமைப்பை காட்டக்கூடியது என்று சொல்லலாம். மங்காேலியர்களை காட்டுமிராண்டி கூட்டம் என்று தான் சொல்லுவார்கள். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்க்கு என்ன இருக்கின்றது என்பதை மட்டும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

இன்றைக்கு நாம் அணிந்து இருக்கும் பேண்ட் கண்டுபிடித்தவர்கள் இவர்கள் தான். இன்றைக்கு அனைவரும் நாம் அணிந்து இருக்கும் பேண்ட் செங்கிஸ்கானின் படை வீரர்கள் தான் முதன் முதலில் அணிந்தார்கள். 

செங்கிஸ்கான் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார். நாடோடி போலவே வாழ்ந்தார். மிகப்பெரிய அரண்மனை இருந்தும் கூடாரத்திலேயே வாழ்ந்தார். ஒரு ஆன்மீகவாதிக்கு உள்ள மிகப்பெரிய இலக்கணமாகவே இவரை கருதுகிறேன். இவரின் தைரியம் மற்றும் ஆன்மீகத்தை படிப்பதற்க்காக தான் இந்த பதிவை தந்தேன். செங்கிஸ்கானைப்பற்றி நிறைய புத்தகங்கள் இருக்கின்றன அதனை நீங்கள் வாங்கி படித்தால் உங்களுக்கு முழுமையான தகவல்கள் கிடைக்கும். சோதிடத்தில் மூன்றாவது வீட்டிற்க்கு பொருத்தமானாவர் இவர் இருப்பார் என்று எனக்கு தோன்றியது அதனால் இதனை எழுதினேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: