Followers

Monday, April 22, 2019

செலவு செய்தால் வெற்றி


வணக்கம்!
          ஒரு வேலை ஒழுங்காக நடப்பதற்க்கு நாம் திறமை வாய்ந்த நபர்களிடம் கொடுப்பது நன்றாக இருந்தாலும் ஒரு சில இடத்தில் அந்த நபர் நம்மிடம் வாங்கிய பணத்தை அழிப்பவர்களாக இருந்தால் அந்த வேலையால் நமக்கு பெரிய வாய்ப்பு மற்றும் சரியாக நடக்கும்.

உங்களிடம் வாங்கிய பணத்தை அவர் குடித்து அழிப்பவர் அல்லது ஏதோ ஒரு வகையில் ஊதாரிதனமாக செலவு செய்பவராக பார்த்து தேர்ந்தெடுக்கவேண்டும். ஒரு பொருளை ஒருவர் விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவரிடம் நாம் அந்த பொருளை வாங்கினால் அந்த பொருள் நீண்டநாள்கள் உழைக்கும்.

நிறைய இடங்களில் நான் இதனை நன்கு கவனித்து சொல்லுகிறேன். நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்து அவர் பெரியதாக ஒன்றும் வாங்கி வைத்துக்கொள்ள மாட்டார் நம்முடைய பணத்தை வைத்து அவர் திறமையாக பிழைக்கமாட்டார். நாம் கொடுத்த பணம் வீணாக போய்விடும்.

நாம் ஒரு கட்டடம் கட்டுவதற்க்கு மூலப்பொருள்களை வாங்கும் நபர்கள் சரியில்லாதவர்களாக இருந்தால் நமது கட்டடம் நன்கு வளரும். எந்த வித தடைகளும் இன்றி நமது கட்டடம் நன்கு வளர்ந்துவிடுகின்றது.  

நீங்கள் எனக்கு அனுப்பும் பணத்தை கூட நான் பெரியளவில் சேமிப்பதில்லை. சேமிப்பு என்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும் ஏன் என்றால் வரும் பணத்தை செலவு செய்தால் தான் உங்களுக்கு காரியம் நடக்கும். இது என்னுடைய குருவே சொல்லிக்கொடுத்த விசயம் இது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: