Followers

Wednesday, April 3, 2019

தெளிவான நிலை உருவாக்க செய்யவேண்டியது?


வணக்கம்!
          நம்முடைய வாழ்வில் நிறைய கஷ்டங்களுக்கு காரணமாக இருப்பது நம்முடைய அறிவை தெளிவாக வைத்துக்கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கின்றது. நமக்கு கிடைத்த அறிவை வைத்து மற்றும் வாய்ப்பை வைத்து நாம் செயலாற்றிக்கொண்டு இருப்போம் ஆனால் கிடைக்காத அறிவு மற்றும் வாய்ப்புகள் ஏராளமாக ஒவ்வொருவருக்கும் இருக்கும்.

ஒருத்தன் தெளிவாக இருந்தால் அவனை அவ்வளவு எளிதில் கிரகங்கள் பாதிக்காது. உங்களின் ஊரில் உள்ள பெரிய ஆள்களை பார்த்தால் அவர்கள் மிகுந்த தெளிவாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் அனைத்து காரியமும் தெளிவாக திட்டம் இட்டு செயலாற்றிக்கொண்டு இருப்பார்கள்.

நம்மிடம் மறைந்து இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்க்கு ஆன்மீகம் பயன்படும். நிறைய கோவில்களுக்கு செல்கிறோம் இந்த கோவிலுக்கு செல்லும்பொழுது எல்லாம் நமக்கு தெளிவான மனநிலை கிடைக்கும்.

ஒவ்வொரு கோவிலையும் நாம் தேடி தேடி சென்று தரிசனம் செய்வது எல்லாம் நம்மிடம் மறைந்து இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டு வருவதற்க்கு இந்த கோவில்கள் உதவி புரியும். பல பெரிய ஆட்கள் என்று சொல்லப்படும் நபர்கள் எல்லாம் இந்த வேலையை வெளியில் தெரியாமல் செய்துக்கொண்டு இருந்திருப்பார்கள்.

ஒரு சிலரை பார்த்தால் கோவிலுக்கு செல்லாமல் கூட நல்ல தெளிவாக இருப்பார்கள் இதற்கு காரணம் அவனிடம் உள்ள கிரக நிலை அப்படி இருக்கும் அவன் வளர்ந்த சூழ்நிலை அப்படி அவனை உருவாக்கி இருக்கின்றது. நம்மிடம் அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை என்றால் நாம் அதனை உருவாக்க நிறைய ஆன்மீக வேலையை செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


1 comment:

KJ said...

Sir, Arumayaana Pathivu... Nan Magara Lagnam, Mithuna Rasi, 2il Maanthi... Yentha Ragasiyathayum Kaaka therivathillai... Tholil Ragasiyam Muthal Kondu, Veliyil Koori Vidukiren.. ithanaal Periya Valarchi illai... Itharku enna Seivathu?? Koorungal Ayya..