வணக்கம்!
மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். நேற்று எழுதிய பதிவை படித்துவிட்டு நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். நாங்கள் போனை எடுக்க தான் நினைக்கிறோம் ஆனால் போனை எடுக்கமுடியாத அளவுக்கு எங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று சொன்னார்கள்.
முதலில் உங்களுக்கு பிரச்சினை வருவதே உங்களின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட காலக்கட்டம் சென்றுக்கொண்டு இருக்கும். பொதுவாகவே தீயகிரகங்களின் தசா காலக்கட்டம் அப்படி இருந்தாலும் மூன்றாவது வீட்டின் தசா உங்களுக்கு நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை வரும்.
மூன்றாவது தசா நடக்கும்பொழுது உங்களுக்கு அதிகபடியான பிரச்சினை கடன் வாங்கி மாட்டிக்கொள்வது அதனால் போனை எடுக்கமுடியாமல் தவிப்பது. மூன்றாவது வீட்டில் உள்ள கிரகத்தின் பலன் தீயபலனாக கொடுத்தால் உங்களின் உறவினர்கள் வரை உங்களை வெறுக்க தொடங்கிவிடுவார்கள்.
மூன்றாவது வீட்டு தசா நடக்கும்பொழுது உங்களின் வளர்ச்சி என்பது சுத்தமாகவே இருக்காது. நீங்கள் பத்து ரூபாய் செலவு செய்து ஒரு வேலை செய்தால் அது ஆயிர ரூபாய் செலவு வைத்து உங்களை வீழ்த்த நினைக்கும்.
இப்படிப்பட்ட தசா உங்களுக்கு நடந்தால் உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகத்திற்க்கு கண்டிப்பாக பரிகாரம் செய்யவேண்டும். பரிகாரம் செய்யமுடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் அதற்கு வழிபாட்டையாவது நீங்கள் மேற்க்கொண்டால் மட்டுமே நீங்கள் தப்பிக்கலாம்.
மூன்றாவது வீட்டால் உங்களுக்கு பிரச்சினை வருகின்றது என்றால் நீங்கள் எனக்கு உங்களின் ஜாதகத்தை அனுப்பி இலவசமாக ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு : 9551155800, 8940773309 What'sApp Number: 9551155800
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment