வணக்கம்!
நமது வீட்டில் உள்ள சமையறையைப்பற்றி பதிவை தந்தவுடன் பல நண்பர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டரிந்தனர். இதனை நான் வாஸ்துபடி சொல்லவில்லை அனுபவத்தை வைத்து சொன்னேன்.
பெரும்பாலான வீடுகளில் சமையறையில் சமையற் செய்ய பணிப்பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். வீட்டில் உள்ள பெண் தான் சமைத்து போடுவார்கள். சமையற்காரியின் மனநிலை பாதிப்பு வரும் என்பதால் இதனை தவிர்ப்பார்கள்.
தற்பொழுது சமையற்காரிகள் தான் பெரும்பாலான வீடுகளில் சமைக்கின்றனர். அவர்களின் வழிப்படி அதாவது அவர்களின் எண்ணப்படி தான் வீட்டின் தலைவன் இருப்பான். உங்களால் முடிந்தவரை நீங்களே சமைக்க பாருங்கள்.
சமையற் அடுப்பை சமைப்பதற்க்கு முன்பும் பின்பும் நன்றாக துடைத்துவிடவேண்டும். வெள்ளி செவ்வாய் கிழமைகளில் அதற்கு பொட்டு வைக்கவேண்டும். மஞ்சள் குங்குமம் வைக்கவேண்டும். மங்களகரமாக அமைத்துவிடவேண்டும்.
சமையற் கூடம் என்றால் அதனை மாடுலர் கிச்சன் வைத்து தான் இருக்கவேண்டும் என்பதில்லை சாதாரணமாக வைத்து இருந்தாலும் அதனை நன்றாக சுத்தமாக வைத்திருந்தாலே போதுமானது. உங்களுக்கு கடன் சுமை என்பது ஏற்படாது. செல்வசெழிப்பை அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment