வணக்கம்!
ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தன்னுடைய பூஜையறையில் அமர்ந்து பூஜை செய்யவேண்டும். தினமும் இருவேளை செய்தால் மிகவும் நல்லதாகவே இருக்கும். நம்முடைய மதத்தில் கட்டுபாடு என்பது கிடையாது. பிற மதங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கூட சாமி கும்பிடவேண்டும் என்று வைத்திருக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கை கூட வேண்டியில்லை நீங்கள் இப்படிப்பட்ட பழக்கத்தை செய்தாலே உங்களை நீங்களே சரி செய்துக்கொள்ளமுடியும். உங்களை நீங்களே ஒழுங்குப்படுத்திக்கொள்வதற்க்கு இது வழி செய்யும். ஒரு பயிற்சி போலவே இதனை செய்யவேண்டும்.
பூஜையறையில் நீங்கள் இருமுறை செய்தாலே ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு உங்களின் உடல் புது பொழிவோடு காணப்படும். உங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் நிறைய வித்தியாசம் தெரியவரும்.
ஒரு சில காலக்கட்டத்திற்க்கு முன்பு காயத்ரி மந்திரப்பயிற்சியைப்பற்றி சொல்லிவந்தேன். பலர் இதனை செய்தார்கள். இது ஒரு நல்ல மாற்றத்தை உங்களுக்கு செய்திருக்கும். பல காரணங்களாக இதனை பதிவுகளில் தொடர்ந்து பின்பற்றி சொல்லி தரமுடியவில்லை. பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு இதனை தற்பொழுதும் செய்து வருகின்றனர்.
தினமும் ஒரு முறை அல்லது இருமுறை நீங்கள் பூஜையறையில் நல்ல முறையில் அமர்ந்து பூஜையை செய்யுங்கள். குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது அமர்ந்து விட்டு அடுத்த வேலையை செய்யுங்கள். உங்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கல்வி உதவி தொகை
இது சுயநலத்தோடு கேட்கும் ஒரு உதவி. எனக்கு கல்வி உதவி தொகை தேவைப்படுகின்றது. கல்வி உதவியை செய்ய விரும்பும் நபர்கள் என்னுடைய வங்கி கணக்கிற்க்கு அனுப்பி வைக்கலாம். கல்வி உதவி என்று குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள். கோவில் கட்டுமானபணிக்கு என்று பணம் வருவதால் கல்வி உதவி என்று குறிப்பிட்டு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment