வணக்கம்!
நேற்றைய பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் நிறைய சந்தேகங்களை கேட்டனர். அவர்களுக்கு முடிந்தவரை போனில் தெரிவித்தலாம். இவ்வளவு சந்தேகங்கள் வந்ததால் அதனைப்பற்றி விளக்கி ஒரு பதிவை தந்துவிடலாம் என்று தான் இந்த பதிவை தருகிறேன்.
நவ சண்டி ஹோமத்தை தான் நான் நவ அம்மன் என்ற பெயரில் வைத்திருக்கிறேன். ஒன்பது கிரகங்கள் எப்படி ஜாதகத்தில் இருக்கின்றனவோ அதனைப்போல் ஒன்பது அம்மனாக வைத்து சண்டியை வணங்கி வருகிறோம்.
ஒவ்வொருவருக்கும் இதனை செய்யும்பொழுது அந்த புகைப்படங்களை எல்லாம் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து இருக்கிறேன். அளப்பரிய சக்தியை வெளிப்படுத்தும் புகைப்படங்களை பார்த்தவர்களுக்கு புரியும். கண்டிப்பாக இதில் நன்மை நடக்கும் என்பதும் புரியும்.
நவ அம்மன் யாகத்திற்க்கு ஒன்பது நாட்கள் செய்வதால் உங்களின் ஒன்பது கிரகத்தினை சாந்தப்படுத்தி நல்லதை செய்ய வைக்க முடியும். பலர் இதனை அதிகம் விரும்பி செய்வதற்க்கும் காரணமாக இருக்கின்றது.
நீங்கள் வெளியில் இந்த யாகத்திற்க்கு செலவை கேட்டால் நம்மிடம் நீங்கள் பத்து வருடத்திற்க்கு செய்துவிடலாம். அவர்கள் செய்வது எந்தளவுக்கு சக்தி வெளிப்படும் என்பது தெரியாது நாம் செய்வதை நன்றாக பார்த்தவர்கள் பலர் இங்கு இருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் தனியாக வருடம் ஒரு முறை இதனை செய்ய ஆரம்பியுங்கள் கண்டிப்பாக நல்ல மாற்றத்தை நோக்கி உங்களின் வாழ்க்கை பயணிக்கும். நீங்கள் இங்கு வந்து இதனை பங்கு பெறவேண்டும் என்றாலும் வந்த பங்கு பெறலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு சில நண்பர்கள் ஒன்பது நாட்களில் ஒரு நாட்கள் வந்து பங்குக்கொள்கின்றனர். ஒன்பது நாட்களும் பங்குக்கொள்ள வேண்டும் என்றாலும் வந்து பங்குக்கொள்ளலாம். அனைவரும் இதனை செய்ய தயார் செய்யுங்கள். தனிநபராக இதனை செய்ய ஆரம்பியுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment