Followers

Sunday, April 28, 2019

மூன்றாவது வீடு எளிய பரிகாரம்


வணக்கம்!
                   தற்சமயம் நாம் மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்து வருவதால் அதற்கு ஒரு சிறிய பரிகாரம் அதே நேரத்தில் எளிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணி அதனை செய்தேன். இது உங்களுக்கும் ஒரு நல்லதாக அமையும் என்று எண்ணியது அதனால் உங்களிடம் சொல்லுகிறேன். மூன்றாவது வீடு தபால் வழியையும் காட்டக்கூடிய ஒரு அமைப்பு என்பதால் இதனை செய்தேன். 

கொரியர் வழியாக ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்று எண்ணி செய்த விசயம் அது. நமது அம்மன் கோவிலுக்கு நன்கொடை திரட்டும் பணிக்கு நண்பர்களுக்கு நன்கொடை புக்கை அனுப்பி வைத்தேன். இது கொரியர் வழியாக தான் செய்தேன். அடுத்ததாக மூன்றாவது வீடு ஒரு விதத்தில் அன்னிய தேசத்தையும் குறிக்கும். நேராக ஒன்பதாவது வீடு இருப்பதால் இதற்கு அமேசான் ஆன் லைன் கடையில் ஒரு பொருளை வாங்கலாம் என்று எண்ணி அதனை தேர்வு செய்தேன்.

பொதுவாக நம்மிடம் ஒரு குணம் இருக்கின்றது. மக்கள் அதிகம் பேர் எதில் விழுந்து கிடக்கின்றார்களோ அதில் நான் ஈடுபாடு காட்டுவதில்லை. தற்சமயம் அனைத்து மக்களும் பொருட்களை வாங்குவதற்க்கு இந்த மாதிரியான ஆன்லைன் கடைகளில் வாங்குவதற்க்கு ஆர்வம் காட்டுகின்றனர். நமக்கு தேவையானவற்றை மட்டும் வாங்க வேண்டும் தேவையில்லாத விசயங்களில் ஆர்வத்தை தூண்டுவது போலவே இந்த கம்பெனிகள் இயங்கும்.

எதனை வாங்கலாம் என்று எண்ணி கடைசியில் ஒரு புக்கை வாங்கினேன். இது 700 ரூபாய் விலையில் வாங்கினேன். தபால் வழியாக நமக்கு ஒரு நல்லதை செய்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அந்த வீட்டிற்க்குரிய பலன் எப்படி நடக்கின்றது என்று ஒரு செயல்படுத்தலாம் என்று எண்ணி இதனை செய்தேன். பெரும்பாலும் இது நன்றாகவே உங்களுக்கு உதவும்.

நம்மால் முடிந்த சிறிய விசயத்தை எளிமையாக கூட பரிகாரம் போல் செய்துக்கொள்ளலாம். பெரிய அளவில் இதனை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் வந்தால் வேறு மாதிரி செய்துக்கொள்ளலாம். எனக்கு மூன்றாவது வீடு ஒரு சில காலக்கட்டங்களில் பெரிய பிரச்சினையாக வந்து இருக்கின்றது. தற்பொழுது இது பிரச்சினை இல்லை நன்றாகவே வேலை செய்கின்றது. அதனை ஒரு பரிசோதனை செய்வதற்க்கு இதனை செய்தேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: