Followers

Sunday, September 15, 2013

ஆன்மீக அனுபவங்கள் 111


வணக்கம் நண்பர்களே!
                     எனக்கு கேரள நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் பல பேர் ஆன்மீகத்தில் தொழில் செய்பவர்கள். இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் நம்மை போல் தினமும் ஏதாவது ஒரு நபருக்கு செய்துக்கொண்டு இருக்காமல் வருடத்திற்க்கு ஒருவருக்கு மட்டும் செய்வார்கள். 

ஒரு காரியம் செய்து அதனை பல வருடங்களுக்கு உட்கார்ந்துக்கொண்டு சாப்பிடுவது போல் சம்பாதித்துவிடுவார்கள். ஏதாவது ஒரு வேலைக்கு டைம் பாஸ்க்காக செல்வார்கள். என்னு்டன் மற்றும் பக்கத்து ரூம்மில் இருந்தவர்கள் மொத்தம் ஆறு பேர் அனைவரும் கால் சென்டரில் வேலை செய்துக்கொண்டு இந்த மாதிரி வேலையை செய்தார்கள். அவர்களை பார்த்தால் ஆன்மீகவாதிபோல் இருக்கமாட்டார்கள். 

எனக்கு முதலில் இவர்களை பார்த்து சந்தேகம் வந்தது. எப்படி கால்சென்டிரில் வேலை பார்த்துக்கொண்டு இவ்வளவு பணம் இவர்களிடம் இருக்கின்றதோ என்று பிறகு தான் தெரிந்து அவர்கள் இந்த தொழில் செய்கிறார்கள் என்று தெரிந்தது.

அவர்கள் என்னிடம் சொல்லுவார்கள். எங்களோடு வாருங்கள் நல்ல பணம் உங்களுக்கு வரும். வருடத்திற்க்கு ஒரு வேலை மட்டும் தான். ஒரு வேலை செய்தாலே போதும் பல வருடங்களுக்கு அந்த பணம் நமக்கு வரும் என்றார்கள்.எதற்கு இது எல்லாம் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். 

எனக்கு தெரிந்து பல பேர்கள் இப்படி தான் செய்கிறார்கள். ஒரு வேலையை செய்துவிட்டு வருடம் முழுவதும் வேறு வேலை பார்ப்பது. ஒரு சிலர் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு வேலையை செய்வதில்லை.ஒரு வேலையிலேயே நிறைய பணம் சம்பாதித்துவிடுகிறார்கள். பல பேர் மாந்தீரிகத்தின் துணைகொண்டு செய்கிறார்கள்.

நீங்கள் நினைக்கலாம் எப்பொழுதும் ஆன்மீகப்பயிற்சி செய்துக்கொண்டு இருப்பார்.அப்படி ஒன்றும் இல்லை. நான் எல்லாம் இப்பொழுது காலையில் ஒரு பூஜை செய்வது அத்தோடு முடித்துக்கொள்வது அது மட்டும் தான் நான் செய்யும் ஆன்மீக பயிற்சி. பிறகு வந்து பதிவு எழுதுவது வரும் சோதிடவாடிக்கையாளர்களை கவனிப்பது மட்டும் தான்.

பதிவுகளில் வரும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் இப்பொழுது அதிக வேலை பளு இருக்கின்றது. மற்றப்படி ஆன்மீகபயிற்சி எல்லாம் செய்வது கிடையாது. நீங்கள் ஒருமுறை எடுத்துவிட்டால் போதும் அதற்கு பிறகு ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கலாம். எப்பொழுது வேண்டுமானாலும் அதனை வைத்து வேலை செய்துக்கொள்ளலாம். 

என்ன வித்தியாசமாக இருக்கின்றதா ஆமாம் நாம் ஆசிரமம் அமைத்தால் ஒழுங்காக வெளிவேஷம் போட்டுக்கொண்டு இருக்கலாம். நமக்கு வரும் வாடிக்கையாளர்களின் பிரச்சினை மட்டும் தீர்த்தால் போதும் என்றால் நாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: