வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ஒருவருக்கு ராகு தசா நடைபெறும் பொழுது அவருக்கு கண்களில் மாற்றம் தெரியவரும். பூனைக்கண் என்று சொல்லுகிறோம் அல்லவா அதுபோல் வரும்.
பிறந்தபொழுது எப்படி இருந்ததோ அப்படி தானே கடைசி வரை இருக்கும் என்று நினைக்கலாம். நன்றாக உற்று நோக்கினால் அவரின் கண்களில் மாற்றத்தை காணமுடியும்.அதனை வைத்தே அவருக்கு ராகு தசா நடைபெறுகிறது என்று சொல்லிவிடலாம். ஒரு சிலருக்கு ராகுவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு பிறந்த நாள்களில் இருந்தே கண்கள் பூனையின் கண்கள் போல் இருக்கும்.
நீங்கள் சோதிடம் பார்த்தால் ஜாதகத்தை மட்டும் பார்க்ககூடாது அவர்களின் நடவடிக்கை மற்றும் அவர்களின் உடலை பார்த்தால் கிரகங்களின் ஆதிக்கத்தை கண்டுபிடித்துவிடலாம்.அதனை வைத்தே நாம் சோதிட பலனை சொல்லிவிடலாம்.
ஒருவர்க்கு ராகு தசா நடைபெறும்பொழுது அவர் சும்மா அமர்ந்து இருக்கமாட்டார். அவர் நெளிந்துக்கொண்டே இருப்பார்.பாம்பு நெளிந்து செல்வது போல் தான் செல்வார்கள். அவர்கள் நடக்கும்பொழுது பார்த்தால் கூட இதனை நீங்க்ள் கண்டுபிடித்துவிடலாம்.
ஒரு சிலருக்கு இதனை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அனைவருக்கும் அது போல் நடக்கும் என்று சொல்லமுடியாது. இது ஒரு பொதுப்பலன் மட்டுமே.ஒவ்வொருவரையும் உற்றுநோக்கும்பொழுது ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையுடன் கடவுள் அவர்களை படைத்திருக்கிறார். அந்த படைப்பை நாம் பார்த்து பலன் சொல்லுவது தான் நமது வேலை.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment