Followers

Sunday, September 15, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 29


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவை பார்த்துவருகிறோம். இன்று ஏன் என்று தெரியவில்லை அதிகமாக ராகு பக்கம் சென்றுக்கொண்டு இருக்கிறேன். சரி மனதில் வரும்பொழுது அதனை கொடுத்துவிடவேண்டும். ஏன் என்றால் மனதில் வரும்பொழுது எழுதிவிடுவேன். ஒரு சில நேரத்தில் என்ன தான் செய்தாலும் எந்த தலைப்பும் வராது. கிளம்பி போய்விடுவேன். சரி வந்த விசயத்தை பார்த்துவிடலாம்.

ராகு தசாவில் குருபுத்தியை பார்த்துக்கொண்டு வருகிறோம். இப்பொழுது புத்திநாதனான குரு லக்கினத்திற்க்கு ஆறாவது வீட்டில் அல்லது எட்டாவது வீட்டில் அல்லது பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்தால் மற்றும் குரு கெடுதல் தரும் கிரகங்களோடு அமரும்பொழுது அந்த புத்தி முழுவதும் பிரச்சினை தான் தரும். 

குரு மங்களகாரகமான வேலைக்கு சொந்தகாரர் என்பதால் அந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறாது. அப்படி நடந்தாலும் அந்த நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் மிகப்பெரிய பிரச்சினையை கிளப்பிவிட்டுவிடுவார். பல திருமணங்களில் நீங்களே பார்த்து இருக்கலாம். கடைசி நேரத்தில் மாப்பிள்ளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று செய்திதாள்களில் வரும். ஒரு சில இடத்தில் திருமண மண்டபத்தில் நகை திருடு என்று வருகிறது அல்லவா. அதற்கு எல்லாம் இப்படிபட்ட புத்தியில் தான் நடைபெறும்.

பெண்ணின் ஜாதகமாக இருந்தால் அவரின் கணவனுக்கு இந்த புத்திகாலங்களில் மரணத்தை கூட ஏற்படுத்திக்கொடுத்துவிடுவார். மனதில் பிரச்சினை ஏற்பட்டுவிடும். இதயத்தில் கோளாறு ஏற்பட்டுவிடும். அதே நேரத்தில் பெற்றோர்களாக இருந்தால் அவர்களின் பையன் இவர்களை விட்டு பிரிந்து சென்றுவிடுவான்.

ராகு தசா குரு புத்தியில் அதிகமாக வீட்டிற்க்கு மூத்த பையன் பிரிந்து சென்றுவிடுவார்கள்.அவர்களால் உங்களுக்கு மனகஷ்டத்தை தந்துவிடும்.நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

பரிகாரமாக குருவிற்க்கு உரிய பொருட்களை பயன்படுத்தாலும். மஞ்சள் ஆடையை அணியலாம். கொண்டைகடலை மாலையை வியாழக்கிழமை தோறும் நவகிரகங்களில் உள்ள குருவிற்க்கு மாலை போடலாம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

ATOMYOGI said...

//ராகு தசாவை பார்த்துவருகிறோம். இன்று ஏன் என்று தெரியவில்லை அதிகமாக ராகு பக்கம் சென்றுக்கொண்டு இருக்கிறேன். சரி மனதில் வரும்பொழுது அதனை கொடுத்துவிடவேண்டும்//

கொடுங்கள்! மேலும் மேலும் கொடுத்துக் கொண்டே இருங்கள்.பெற்றுக்கொண்டே இருக்கிறோம். மேலும் பெற்றுக் கொள்ளவும் காத்திருக்கிறோம். நன்றி.

rajeshsubbu said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி