வணக்கம் நண்பர்களே!
வராக்கடன் வந்துவிட்டது என்ற சொல்லுவார்கள். உண்மையில் இந்த விசயத்தில் அம்மன் அதிகம் கவனம் செலுத்தாது. ஒரு சிலருக்கு மட்டும் செய்யும். ஏன் என்றால் நீங்கள் கடனாக பிறர்க்கு பணம் கொடுத்திருப்பீர்கள். நீங்கள் அம்மனிடம் வேண்டுதல் வைக்கும்பொழுது அம்மன் அங்கு சென்று பார்த்தால் உண்மையில் அவன் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தால் ஒன்றும் செய்யாமல் திரும்பி வந்துவிடும்.
இந்த விசயத்தில் நாங்களே தலையிடுவதில்லை ஏன் பாவம் கஷ்டபடுகின்றவனை போய் தொந்தரவு செய்யவானே என்று விட்டுவிடுவேன். அவனுக்கு பணம் வந்தவுடன் திருப்பி தரபோகின்றான். இன்றைய காலத்தில் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மக்கள் எல்லாம் மானத்திற்க்கு கட்டுப்பட்டு வாழ்கின்ற மக்களாக தான் இருக்கின்றார்கள்.
நீங்கள் பணம் கொடுத்தால் கண்டிப்பாக திருப்பி தந்துவிடுவார்கள். என்ன கொஞ்சம் நாட்களாகும். அவர்களை தொந்தரவு படுத்த தேவையில்லை. பணம் வைத்துக்கொண்டு திருப்பி கொடுக்ககூடாது என்று நினைத்தால் அப்பொழுது வேண்டினால் நடக்கும். பொதுவாக நான் பணம் விசயத்தில் தலையிடகூடாது என்று நினைப்பேன்.
இதேப்போல் தான் கம்பெனி நடத்துபவர்களும் பணத்தை கொடுத்துவிட்டு மாட்டிக்கொள்வார்கள். பணம் வசூல் ஆகவில்லை என்று சொல்வார்கள அதிலும் நான் தலையிடுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை இதில் எல்லாம் எனக்கு அந்தளவுக்கு மனம் நாட்டம் வராது.
இநத் விசயத்தில் மட்டும் நான் அதிகம் கவனம் செலுத்தினால் நல்ல பணத்தை நான் பார்க்கலாம் ஆனால் மிகப்பெரிய பாவத்தை சேர்க்க வேண்டியிருக்கும். நீங்களும் அம்மனிடம் வேண்டுதல் வைக்கும்பொழுது அந்த வேண்டுதலை தவிர்க்கவும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment