வணக்கம் நண்பர்களே!
இன்று சோதிடத்தைப்பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது ஆனாலும் பல பேர்க்கு இதனைப்பற்றி அந்தளவு புரிதல் இல்லாமல் இருக்கின்றது. ஒரு மனிதனுக்கு ஏற்படும் நல்லது கெட்டது அனைத்தையும் காட்டிக்கொடுக்கும் கண்ணாடி அவனின் ஜாதகம்.
ஒருவருடைய ஜாதகத்தை வைத்துக்கொண்டு அதில் எந்த நேரம் எல்லாம் நமக்கு பிரச்சினை வருகின்றது என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை தெரிந்துக்கொண்ட பிறகு அந்த நேரத்தில் விழிப்போடு இருந்து அதிகமான தெய்வ வழிபாட்டை மேற்க்கொள்ளவேண்டும். அப்பொழுது மட்டுமே அவனுக்கு வரும் பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். நடப்பது நடக்கட்டும் என்று உட்கார்ந்துக்கொண்டுவிட்டால் அவ்வளவு தான் உங்களை விட்டுவைக்காது.
நடப்பது நடக்கட்டும் என்ற வார்த்தை சந்நியாசி சொல்லலாம் இல்லறத்தில் இருப்பவன் சொல்லகூடாது. நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து நடப்பது நடக்கட்டும் என்று சொன்னால் உங்களின் குடும்பம் சிதைந்துவிடும். குடும்ப தலைவன் தன் குழந்தைகளை வளர்த்து அதற்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கும் வரை நீங்கள் இந்த பூமியில் இருக்கவேண்டும்.
அதற்காக கண்டிப்பாக ஜாதகத்தை பார்த்துக்கொண்டு வருகின்ற துன்பங்களை நீக்க என்ன வழி என்று பார்க்கவேண்டும்.பல பேர்களின் குடும்பங்கள் வீணாக போனதற்க்கு இந்த வார்த்தை தான் காரணமாக இருக்கின்றது. இல்லறம் என்று வந்துவிட்டால் எப்படி எல்லாம் நமக்கு வரும் இடர்களில் இருந்து தப்பிப்பது என்பது மட்டுமே உங்களுக்கு நினைப்பு இருக்கவேண்டும். அதனை விட்டுவிட்டு நடப்பது நடக்கட்டும் என்று சொல்லுவது இல்லறவாசிகளுக்கு அழகு அல்ல.
ஒரு குடும்பம் சிதைந்துவிட்டால் அதன் பிறகு எப்பேர்ப்பட்ட மகான் வந்தாலும் தூக்கி நிறுத்தமுடியாது. வெள்ளம் வருவதற்க்கு முன்பே அணை போடு என்று முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். நான் பார்த்த பல குடும்பங்கள் சிதைந்தற்க்கு காரணம் அவர்கள் ஆன்மீகத்தில் எந்த ஒரு விசயத்தையும் கற்றுக்கொள்ளவில்லை மற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனை படிக்கும் நீங்களாவது உங்களின் குடும்பத்தை காப்பாற்றிக்கொள்ள என்ன வழி இருக்கிறது என்று பார்த்து அதற்கு தகுந்தார்போல் செய்துக்கொள்ளுங்கள் மற்றும் உங்களை சார்ந்தவர்களையும் காப்பாற்றிவிடுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.
என் கருத்தும் அதுவே .
தெய்வம் தன்னை நம்பியவர்களை காப்பது போல்
ஒரு க்ரஹஸ்தனும் தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தைக்
காப்பாற்ற வேண்டும். அதுவே அவனின் முதல் இல்லற தர்மம்.
ஆன்மீகமும் அளவுடன் இருத்தல் நலம்.
குரு , கேது , 9-ம் இடம் வலுத்தவர்களுக்கு வேண்டுமாயின்
சன்யாசம் பொருந்தலாம். மற்றவர்களுக்கு சுக்கிரன் தான் ..
அதாவது லெளகீகம் தான் .. அதுவும் அளவுடன் .
நீங்கள் சொன்னது போல் நடப்பது நடக்கட்டும் என்று
மூலையில் முடங்கி விடாமல் ஜோதிடத்தின் துணையுடன்
தீர்வு காண்பதே புத்திசாலித்தனம்.
பகிர்விற்கு நன்றி.
வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி.
Post a Comment