வணக்கம் நண்பர்களே!
விநாயகர் சதுர்த்தி அன்றே நமது அம்மனின் பூஜையும் வைத்திருக்கிறேன். நமது அம்மன் இருக்கும் இடத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது அதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவும் அம்மனின் பூஜையும் திங்கள் கிழமை நடத்தப்படும். இந்த பூஜைக்கு என்று வேண்டுதல் வைத்திருந்தவர்கள் பணம் உதவி செய்தார்கள். பல பேர்கள் வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நிறைவேற்றி கொடுத்ததால் அவர்கள் பணம் அனுப்பியுள்ளார்கள்.
நமது அம்மனின் பூஜைக்கு என்று முதலாவதாக பணம் கொடுத்தவர் பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் அவரின் பெயரை வெளியிடவில்லை. வழக்கம்போல் அம்மனின் பூஜைக்கு என்று பணம் அனுப்பிய நண்பர் கிருஷ்ணப்ப சரவணன். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நண்பர் சுகி மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த திரு சிவராமன் போன்றவர்களால் இந்த பூஜை நடத்தப்படுகிறது.
திங்கள் கிழமை அன்று நமது அம்மனின் பூஜையில் அன்னதானம் செய்யப்படும். அன்று நல்ல கூட்டம் வரும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி உங்களின் வீடுகளி்ல் கும்பிடும்பொழுது நமது அம்மனை நினைத்துக்கொள்ளுங்கள். உங்களின் வேண்டுதலை வைக்கலாம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
உங்களுக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.!
Post a Comment