Followers

Thursday, September 12, 2013

மகிழ்ச்சியான தருணம்


வணக்கம் நண்பர்களே!
                    நான் பதிவு எழுதிய நாட்களில் இருந்து ஒரு எண்ணம் இருந்து வந்தது. எப்படி நமது ஜாதககதம்பத்தை கிராமத்து மக்களுக்கும் படிக்க வைப்பது என்ற எண்ணம் தான் அது அதற்க்காக தான் பல வியாபார கம்பெனிகளுக்கு உதவுகிறேன் ஆனால் நேற்று முதன் முதலாக ஒரு நிகழ்வு நடந்தது.

ஒரு கிராமத்தில் இருந்து என்னை கூப்பிட்டு அம்மனின் ஹோமத்தை நடத்திக்கொடுங்கள் என்று கேட்டார். நானும் அதற்கு ஏற்றுக்கொண்டு நேற்று சென்றேன். சென்ற பிறகு தான் தெரிந்தது அது கிராமம். ஆலங்குடியில் (குருஸ்தலம்) இருந்து சுமாராக ஆறு கிலோ மீட்டரில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் நெட் வைத்துக்கொண்டு ஜாதககதம்பத்தை படிக்கிறார்கள் என்றதும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயமாக இருக்கின்றது.

அவர் நமது ஜாதககதம்பத்தில் வழியாக காயத்ரி மந்திர பயிற்சியும் செய்துவருகிறார். அவரின் வீட்டில் அம்மனின் ஹோமத்தை நடத்த வேண்டும் என்று பல நாட்களுக்கு முன்பே என்னிடம் கேட்ருந்தார். அம்மனின் பூஜைக்கு சென்றதால் அப்படியே இதனை முடித்துவிட்டு வந்துவிட்டேன். எனது ஊரில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் தான் ஆலங்குடி உள்ளது. 

அவரின் வீட்டில் பூஜையறையில் நமது அம்மனின் போட்டோவை வைத்திருக்கிறார்.நம்மீது எவ்வளவு நம்பிக்கையுடன் ஒரு கிராமத்தில் இருக்கிறார்கள் என்பதை நேற்று நான் நேரில் பார்த்தேன். அவருக்கு அம்மன் மிகப்பெரிய உதவி செய்யும். ஏன் என்றால் கிராமத்தில் இருந்துக்கொண்டு மிகப்பெரிய தொகையை பூஜைக்கு செலவு செய்கிறார் என்றால் அந்த நம்பிக்கைக்கு பல மடங்கு அம்மன் அவர்களுக்கு உதவி செய்யும்.

பணம் என்பதற்க்காக சொல்லவில்லை. ஒருவர் நமக்கு பணம் கொடுக்கும்பொழுதே தெரிந்துவிடும் அவர்களின் நம்பிக்கை. நல்ல பணம் வைத்திருப்பவர்கள் கொடுக்கமாட்டார்கள். பணம் இல்லாதவர்கள் எப்படியாவது பெரிய தொகை கொடுக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அப்பொழுது எனக்கு தெரிந்துவிடும். அதேபோல் நன்றாக அவர்களுக்கு செய்துவிடுவேன்.

பணம் இருப்பவர்கள் சந்தேகப்படுவார்கள். இது நடக்குதோ நடக்கவில்லையோ என்ற குறைவாக பணத்தை கொடுப்பார்கள். பணம் இல்லாதவர்கள் நம்பிக்கையுடன் பணத்தை கூடுதலாக கொடுப்பார்கள். நம்பிக்கை வைக்கும்பொழுது அம்மன் அவர்களுக்கு பலமடங்கு செய்யும்.

நகரத்தில் இருப்பவர்கள் செய்ய தயங்கும் ஒரு விசயத்தை கிராமத்து மக்கள் செய்கிறார்கள் என்றால் இது தான் எனக்கு மகிழ்ச்சி. உண்மையில் அப்படி ஒரு சிறப்பான ஹோமத்தை நடத்திக்கொடுத்துவிட்டு வந்தேன்.நம்பிக்கை வைத்தால் அனைத்தும் உங்களை தேடிவரும்.

கிராமபுற மக்களையும் ஜாதககதம்பம் சென்று அடைவது மகிழ்ச்சியான தருணம் தான். கிராமபுற மக்களுக்கு என்று பல சலுகை தர இருக்கிறேன். நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் தான் கிராம மக்களுக்கு இதனை கொண்டு செல்வது என்பது மட்டுமே எனது விருப்பம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

Anonymous said...

உண்மையில் மகிழ்ச்சியான செய்தி தான்.
வியப்பாக இருக்கிறது.
நானும் உங்கள் வழிகாட்டுதலின் படி முதன் முதலாக
பச்சை பரப்பி மா விளக்கு இட்டு எங்கள் குல தெய்வத்தை
வழிபட்டேன் இந்த வளர்பிறையில் . மாதா மாதம் தடங்கலின்றி
தொடர விரும்புகிறேன். இதை இங்கு பகிரக் காரணம் , அனைவருக்கும்
ஒரு தூண்டுதலாக இருந்து பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் தான்.
மிக்க நன்றி !

rajeshsubbu said...

நன்றி மேடம் தொடர்ந்து செய்யுங்கள்

பாலு (எ) இராமசுப்ரமணியன்.சொ said...

வணக்கம் என்னை மதித்து எனது கிராமத்திர்க்கு வந்து செய்துகொடுத்தமைக்கு மிக்க நன்றி.மேலும் எனது சென்னை நண்பருக்கும் இதுபோல் செய்துகொடுத்தால் மிக்கமகிழ்ச்சியடைவேன் நன்றி

rajeshsubbu said...

வணக்கம் balu சார் உங்களின் சென்னை நண்பருக்கும் கண்டிப்பாக செய்து தருகிறேன்.