Followers

Wednesday, September 25, 2013

தொலைபவர்கள்


ணக்கம் ண்பர்களே!
                    எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கில் முதல் இடத்தில் இருப்பது சினிமா பார்ப்பது. இப்பொழுது நேரம் கிடைக்கவில்லை என்றாலும் மாலை நேரத்திலாவது சினிமா பார்ப்பேன். மாலை நேரங்களில் சோதிடம் பார்ப்பதை தவிர்த்து வருகிறேன். 

கடைசியாக 6 மெழுகுவத்தி என்ற படத்தை பார்த்தேன். ஒரு குழந்தையை மெரினாவில் தொலைத்துவிடுகிறார்கள் ஒரு தம்பதினர். அந்த குழந்தையை தேடி போகும் தந்தை அவர்க்கு ஏற்படும் இடைஞ்சல்கள் என்று கதை செல்லுகிறது. எனக்கு படம் பிடித்து இருந்தது. உண்மையில் இப்படி நடக்கும் என்றால் வருத்தப்படவேண்டிய ஒரு விசயம் தான் இந்த நிகழ்வு.

ஒரு வீட்டில் உள்ள நபர்கள் தொலைவதற்க்கு அல்லது கடத்தப்படுவதற்க்கு என்ன காரணம் என்று சோதிடத்தை பார்த்தால் தெரிந்துவிடும். ஜாதகத்தில் ஆறாவது வீடு என்பது மிகப்பெரிய ஒரு கெடுதலை தரும் வீடு என்பதை நான் அனுபவத்தில் பெற்று இருக்கிறேன். அதன் பாதிப்பு தான் ஆறாவது வீட்டைப்பற்றி விலாவாரியாக எழுதியுள்ளேன். பழைய பதிவில் தேடி பாருங்கள். 

ஆறாவது வீட்டை அவ்வளவு எளிதில் நாம் கணித்துவிடமுடியாது. நாம் சோதிடத்தில் அது கடன் வீடு எதிரி வீடு நோயையை பற்றி சொல்லும் வீடு என்று மட்டும் பார்த்துக்கொண்டு இருப்போம்.

உண்மையில் ஆறாவது எட்டாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டை கணித்து ஒரளவு சொன்னாலும். அதில் இருந்து வருவதை அந்தளவு உறுதியாக இது தான் வரும் என்று நம்மால் சொல்லிவிடமுடியாது.அதிவேகத்தில் வந்து நம்மை அடித்துவிட்டு செல்வதில் வல்லவர்கள் அவர்கள். இதில் வரும் தண்டனை எல்லாம் முன்ஜென்மத்தில் நாம் செய்த தீமைகளால் தான் வருகின்றது. கண்டிப்பாக அது நம்மை தாக்காமல் விடாது. 

ஒருவர் தொலைந்துவிடுகிறார் என்றால் அதற்கு ஆறாவது மற்றும் பனிரெட்டாவது வீடு அதிகம் பங்குபெறும். இதற்கு முன் உள்ள வீட்டை வைத்து தான் நாம் இவர்களை மீட்டு எடுக்கமுடியும். ஐந்தாவது வீடு மற்றும் பதினோராவது வீட்டை பலப்படுத்தி அவர்களை மீட்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: