Followers

Monday, September 2, 2013

ஆத்மசுத்தி கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    மதுரையை சேர்ந்த கண்ணன் அவர்கள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்ருந்தார். நீண்ட நாட்கள் சென்றுவிட்டது இருந்தாலும் இதனை சொல்லவேண்டும் என்று இப்பதிவில் சொல்லுகிறேன்.

அவர் கேட்ட கேள்வி மிகப்பெரிய மகான்கள் கூட கர்மவினையை எடுப்பதற்க்கு கஷ்டப்பட்டு இருந்து இருக்கிறார்கள். நீங்கள் ஆத்மசுத்தி வழியாக எடுக்கமுடியும் என்று சொல்லியுள்ளீர்கள் எப்படி சாத்தியம்?

மிகப்பெரிய மகான்கள் எல்லாம் கஷ்டப்பட்டது உண்மை தான் ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மார்க்கமாக பின்பற்றி வருவார்கள். அந்த மார்க்கத்தில் அதற்கு வழி இல்லாமல் இருக்கும். ஆத்மசுத்தி என்பது சித்தர்களின் மார்க்கத்தில் வந்த ஒரு வழி. சித்தர்கள் கண்டுபிடித்த வழி மிகவும் பவர்புல்லான ஒரு வழி இதனை கொண்டு பிற ஆத்மாக்களை சுத்தம் செய்யமுடியும் இதனை நான் செயல்படுத்தி அதன் வழியாக தான் அடுத்தவர்களுக்கு செய்கிறேன். 

ஆத்மசுத்தி என்பது எனது முழு உழைப்பால் எடுத்த ஒரு விசயம். இதனை எடுத்த பிறகு எனது குரு நாதரிடம் காட்டி அதற்க்குள் ஒரு சில விசயங்களை செய்து அதனை செயல்படுத்தினேன். இந்த ஆத்மசுத்தியில் அனைத்து கர்மாவையும் எடுத்துவிடமுடியாது. ஒரளவு மட்டுமே எடுப்போம். 

ஒரு சந்நியாசியாக ஒருவர் தீட்சை வாங்கினால் அவர்க்கு ஆத்மாவிசுத்தி செய்யார்கள். அதில் முழு கர்மாவையும் எடுத்து அதன் பிறகு தீட்சை அளிக்கப்படும்.

நான் அனைத்து மார்க்கத்திலும் என்ன என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து விட்டு தான் பிளாக்கை எழுதவந்தேன். ஒவ்வொரு மதத்திலும் எப்படி எப்படி செய்வார்கள். அதனை எப்படி நாம் செய்வது என்பது என்னிடம் கற்றுக்கொள்ளமுடியும். அதுவும் எளிதாக கற்றுக்கொள்ளமுடியும். 

நாங்கள் ஒரு வீட்டிற்க்கு சென்றாலே அந்த வீட்டில் நல்லது நடக்கிறது என்றால் சும்மா நடக்குமா அவ்வளவு உழைப்பு இருக்கிறது. அதனால் பிறர்க்கு நல்லது நடக்கும்.ஆத்மசுத்தி ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக செய்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

ஆத்மசுத்தி செய்தவர்கள் மந்திரங்களை பயின்றால் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடலாம். ஆத்மசுத்தி செய்துவிட்டு சும்மாவும் இருந்துவிடகூடாது நாமும் முயற்சி செய்யவேண்டும் அப்பொழுது தான் எளிதில் நடைபெறும். நடைபெறுவது கலிகாலம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: