Followers

Thursday, September 19, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 34


வணக்கம் நண்பர்களே!
                    இன்று நெட் சரிசெய்து தருவதாக சொல்லியுள்ளார்கள். பார்க்கலாம். நிறைய எழுதவேண்டும் என்று நினைத்தால் இப்படி இடையூறு ஏற்பட்டுள்ளது. என்னுடைய சொந்த வேலை எல்லாம் இந்த நேரத்தில் முடித்துவிட்டேன். 

ராகு தசாவில் சனியின் புத்தியைப் பற்றி பார்த்து வருகிறோம். சனி கிரகம் கெடுதல் தரும் நிலையில் அமர்ந்து இருந்தால் இந்த புத்தி முழுவதும் என்ன தான் ராகு நன்றாக இருந்தாலும் படுத்தி எடுத்துவிடுவார்.

சனியின் புத்தியில் நீங்கள் விவசாயிகளாக இருந்தால் பயிர்கள் எல்லாம் நாசம் செய்துவிடும். இந்தியாவின் விவசாயம் பருவமழையின் சூதாட்டம் என்று சொல்லுவார்கள். இந்த சூதாட்டத்தால் உங்களுடைய பயிர்கள் நாசம் செய்துவிடும். உங்களுக்கு நஷ்டம் தான். 

அரசாங்க வழியில் பிரச்சினையை தந்துவிடுவார். நீங்கள் ஒரு கட்டிடம் கட்டி இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த கட்டத்தை வைத்து தான் உங்களுக்கு வருமானம் என்று வைத்துக்கொண்டால் அந்த கட்டத்தை சாலை விரிவாக்கம் என்று உங்களின் கட்டித்தை இடித்துவிடுவார்கள். 

உங்களின் வருமானத்திற்க்கு மிகுந்த சிரமம் ஏற்படும். ராகு தசாவில் குரு புத்தி நன்றாக இருந்து அந்த புத்தியில் நல்ல வருமானத்தால் சேர்த்து வைத்திருந்தால் அந்த பணத்தை சனியின் புத்தியில் எடுத்துகொள்வார். ஒரு சிலர் ராகு தசாவின் குருபுத்தியில் பங்குசந்தையில் லட்சகணக்கில் சம்பாதிப்பார்கள். அதில் சம்பாதித்த பணத்தை சனியின் புத்தியில் அனைத்தையும் பிடிங்கிக்கொள்வார்.

சனியின் நிலை சரியில்லை எனும்பொழுது ராகுதசாவின் சனியின் புத்தி காலத்தில் சும்மா இருந்தால் போதும். எந்த வேலையும் செய்யாமல் கோவில் குளம் என்று காலத்தை கழிக்கலாம். ஏன் என்றால் இருவரும் கெட்ட கிரகம். நமக்கு சங்கு ஊதினாலும் ஊதலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

ATOMYOGI said...

//ராகு தசாவில் சனியின் புத்தியைப் பற்றி பார்த்து வருகிறோம். சனி இந்த புத்தி முழுவதும் என்ன தான் ராகு நன்றாக இருந்தாலும் படுத்தி எடுத்துவிடுவார்.//
என்ககு ராகு திசை சனி புத்தியில் தான் திருமணம் நடந்தது. :‍-) :-) :-)

rajeshsubbu said...

திருமணமே ஒரு கஷ்டம் என்று நினைக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.