Followers

Thursday, September 26, 2013

சேவை செய்வோம்


ணக்கம் ண்பர்களே!
                    என்னை நெருங்கி தொடர்பு வைத்திருப்பவர்கள் அதிகம் பேர் யாராக இருக்கும் என்று சிந்தனை செய்து பார்த்தேன். அதாவது என்னோடு அதிகமாக பழக்கம் வைத்திருப்பவர்கள். சிந்தனை செய்து பார்த்தேன். அதில் ஒரு உண்மை தெரிந்தது.

என்னோடு அதிகமாக தொடர்பு வைத்திருப்பவர்கள் அனைவரும் அவர்களின் வீட்டில் முன்னோர்கள் எதாவது ஒரு பொதுநலனில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் அப்பா கோவில் கட்டியுள்ளார் அல்லது ஊர் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்திருக்கிறார். அன்னதானம் செய்தவர்களாக இருக்கின்றார்கள். 

சோதிடர்களுக்கு நல்லவர்களும் தொடர்பு இருக்கும் கெட்டவர்களும் தொடர்பு இருக்கும் ஆனால் நீண்ட நாள்களாக தொடர்பு வைத்திருப்பவர்களை ஒரு லிஸ்ட் எடுத்து பார்த்தால் அவர்கள் யார் என்று தெரியவருகிறது. அனைவரும் பொதுநலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றார்கள.

அவர்களின் குடும்பங்கள் ஒரு சில கஷ்டத்தை அனுபவித்தாலும் அதனை காப்பாற்றுவதற்க்கு என்னை நாடி வருவதற்க்கு அவர்களின் முன்னோர்கள் செய்த புண்ணியபலன் பலனை தருகிறது. இதில் இருந்து ஒன்றை நான் அறிந்துக்கொண்டேன். நாம் நிறைய புண்ணியகாரியங்கள் செய்ய வேண்டும். 

அப்படி நாம் புண்ணியம் செய்துவிட்டால் நமது தலைமுறையினர் எப்படி கஷ்டப்பட்டாலும் அந்த நேரத்தில் ஒரு கை உங்களை தூக்கிவிட கை நீட்டும் என்பது நன்றாக எனக்கு தெரிகிறது. 

நீங்களும் உங்களின் தலைமுறையினர்க்கு நல்லது செய்ய இன்றே பொது காரியங்களில் ஈடுபாடு காட்டுங்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நான் ஒரு சில கோவில்களுக்கு செல்லும்பொழுது கோவிலுக்குள் மக்கள் விட்டு சென்ற பேப்பர்கள் கீழே இருந்தாலும் அதனை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு செல்வேன். இப்படி கூட உங்களின் பொதுநலன் கருதி செய்யலாம்.

தினமும் ஒரு சின்ன உதவியை பிறர்க்கு என்று உதவினால் போதும். நீங்கள் செய்துக்கொண்டே வரும்பொழுது உங்களின் குழந்தைகள் நன்றாக வாழ்வார்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: