வணக்கம் நண்பர்களே!
அம்மனின் பூஜை மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நல்லபடியாக நடந்து முடிந்தது. இப்பொழுது ஊரில் தான் உள்ளேன். இங்கு உள்ள பல வியாபார நண்பர்கள் தொடர்புக்கொண்டு அவர்களுக்கு உதவி கேட்டுள்ளார்கள். அதனை முடித்துக்கொண்டு நாளை இரவு சென்னைக்கு புறப்படுகிறேன். வியாழ கிழமையில் இருந்து பல பதிவுகளை தருகிறேன்.
விநாயகர் சதுர்த்தி விழா கிராமத்திலும் விட்டுவைக்கவில்லை இங்கு உள்ள அனைத்து கிராமத்திலும் அதே நேரத்தில் ஒவ்வொரு தெருவிலும் பிள்ளையார் சிலை வைத்து விழா நடத்துக்கிறார்கள். நல்ல முன்னேற்றம் தான் அதே நேரத்தில் இந்த விழா நடக்கும் இடத்தில் அல்லது பிள்ளையாரை கரைக்கும் நாளில் அமைதியோடு நடைபெற்றால் நன்றாக இருக்கும் ஏன் என்றால் பிள்ளையாரை பார்த்து பிறர் பயம்கொள்ளகூடாது என்ற காரணத்தால் தான் இதனை சொல்லுகிறேன்.
விழா என்றாலே சிறிய பிரச்சினையாவது ஏற்படும் அதே நேரத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு பண்டிக்கை போல் தான் இருக்க வேண்டும். பிறரை பயம்முறுத்தும் விழாவாக இருக்ககூடாது. நமது இந்து மதம் என்பது அமைதியான மதம். பிறருக்கு தீங்கு இழைக்காத மதம். பிறரின் மீது அன்பை செலுத்தவேண்டும்.
விநாயகர் சிலையை கரைக்கும்பொழுது அமைதியாக கரைத்தால் நல்லது. நமது மதமும் வன்முறையோடு சேர்ந்த மதம்போல் இருக்ககூடாது. அமைதியான வழியில் ஆன்மீகத்திற்க்கு சென்றால் அனைத்தும் வசமாகும்.
சென்னை திரும்பியவுடன் அதிகமான பதிவுகளை தருகிறேன். ஆன்மீகம் மற்றும் சோதிடத்தில் நிறைய செய்திகளை பெறமுடியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
ஐயா! எனக்கு இந்த சந்தேகம் உண்டு. அதாவது பிறந்த நாளை பிறந்த மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திரத்தினை வைத்து கணக்கு வைப்பதா? அல்லது திதியை கொண்டு கணக்கு வைப்பதா? ஏன் கேட்கிறேன் என்றால் விநாயகருக்கு திதியை வைத்து பிறந்த நாள் கொண்டாடுகிறோம்.
எது சரி? நட்சத்திர கணக்கா? அல்லது திதி கணக்கா? நிச்சயம் இதில் ஏதாவது ஒன்றாக தானே இருக்க முடியும். அது எது என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
Post a Comment