வணக்கம் நண்பர்களே!
ஒரு மனிதன் தன்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்த பிறகு தான் ஆன்மீகவழியை தேர்ந்து எடுக்கிறான். பல நிலையிலும் தோல்வியை தழுவி அவன் கடைசியாக கடவுள் விட்ட வழி என்று எண்ணி ஆன்மீகத்தை தேர்ந்தெடுக்கிறான்.
ஆன்மீகவழியும் தோல்வியை கொடுத்தால் அவனால் ஒன்றும் செய்யமுடியாது. அந்த ஒரே காரணத்திற்க்காக மட்டுமே நான் வரும் நபர்களுக்கு ஒழுங்காக செய்து தரவேண்டும் என்று நினைக்கிறேன். எப்படியும் எனது சக்தியை கொடுத்து உழைத்து அவர்களுக்கு நல்லவழியை தரவேண்டும் என்று நினைப்பேன்.
ஒரு சிலருக்கு என்னால் முடியாது என்று சொல்லிவிடுவதும் உண்டு ஏன் என்றால் அது முடியும் என்றால் எடுக்கலாம் முடியாதா காரியத்தை எடுத்து செய்தால் அதனால் நமக்கு கெட்டபெயர் தான் வரும் என்று எண்ணி விட்டுவிடுவது உண்டு.
ஆன்மீகத்திற்க்கு வந்து எந்த நிலையிலும் அவர்கள் ஏமாற்றபடகூடாது. பல வழியிலும் ஏமாற்றம் அடைந்து கடைசியில் வரும் இடமும் ஏமாற்றமாக இருந்தால் அது அவர்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய பாவமாக இருக்கும்.
நீங்களும் பிறர்க்கு பரிகாரம் செய்யும்பொழுது முடியும் என்று தெரிந்தால் வாக்குறுதியை தாருங்கள் அப்படி இல்லை என்றால் வாக்குறுதியை தரவேண்டாம்.
பிரச்சினையை பார்த்துவிட்டு இது இப்படிபட்ட பிரச்சினை இது நடப்பதற்க்கு இவ்வளவு நாட்கள் ஆகும் உங்களுக்கு சம்மதம் என்றால் செய்யலாம் என்று சொல்லிவிடுவது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment