Followers

Monday, September 2, 2013

கலியுக கதை




வணக்கம் நண்பர்களே!
                    சோதிடம் பார்ப்பது என்பது இருக்கின்றதே அது மிகப்பெரிய வேலை ஏன் என்றால் நல்லவனும் வருவான் கெட்டவனும் வருவான். இவர்களை சமாளிப்பதே மிகப்பெரிய வேலை. விதவிதமான மனிதர்களை சந்திக்கும் ஒரு நபர் யார் என்றால் அது சோதிடராகதான் இருப்பார்கள். 

என்னை தேடிவரும் நபர்களின் கதையை எழுதினாலே ஒரு நாளைக்கு இருபது பதிவுக்கு மேல் சொல்லும். ஒரு சில நாட்களாக ஒரு நபர் என்னை தேடி வருவார். அது ஒரு பெண் அவர் ஒரு பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார். அவரின் தந்தையும் என்னிடம் பேசியிருக்கிறார். இந்த பெண்ணிற்க்கு வயது முப்பதை தாண்டிவிட்டது. 

அந்த பெண்ணிற்க்கு திருமணம் செய்தவற்க்கு தான் என்னிடம் சோதிடம் பார்க்க வந்தார். இந்த பெண் எந்த மாப்பிள்ளையை பார்த்தாலும் அந்த பெண்ணின் தந்தை வேண்டாம் என்று சொல்லுவது.அப்படி இல்லை என்றால் மாப்பிள்ளையின் வீட்டில் போய் ஏதாவது பேசி வம்பு செய்துவிட்டு வருவது.

பல ஜாதகத்தையும் நான் பார்த்துவிட்டேன். இந்த பெண்ணிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஏன் நான் பல ஜாதங்களை பார்க்கிறேன். ஏன் செட்டாகவில்லையா என்று கேட்டேன். அதற்க்கு அந்த பெண் எனக்கு பிடித்து இருக்கிறது ஆனால் எங்களின் வீட்டில் தான் பிரச்சினை என்றார். அப்படி என்ன பிரச்சினை என்று கேட்டேன். எனது திருமணம் செய்வதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. எனது வருமானத்தில் அவர்கள் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார். பல கதைகள் இப்படி நடக்கின்றன். உலகம் கலியுகம் டா என்று நினைத்தேன்.

நாம் நினைத்து பார்க்காத பல விசயங்கள் இன்று உலகத்தில் நடைபெறுகிறது. யாரையும் நம்பமுடியவில்லை அது அப்பனாகவும் இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி அனைத்தையும் சந்தேகத்தோடு தான் பார்க்கவேண்டிய காலமாக இது இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: