வணக்கம் நண்பர்களே !
நேற்று மதியம் மாத்தூரில் எனது உறவினர் வீட்டிற்க்கு சென்று இருந்தேன். எனது உறவினர் அனைவரும் வாருங்கள் இன்று பெருமாள் கோவிலுக்கு செல்லலாம் என்று என்னை அழைத்தார்கள்.
என்னடா புரட்டாசி சனிக்கிழமை அன்று நாம் பெருமாளை பற்றி நினைக்ககூட இல்லை. அவரே நம்மை இழுக்கிறார் என்று எண்ணி சரி வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களோடு சென்றேன். அவர்கள் அனைவரும் வாருங்கள் நடந்து செல்லலாம் என்று சொன்னார்கள் சரி நடந்தே சென்றோம்.
மணலியில் கரிகிருஷ்ண பெருமாள் கோவில் என்று பெருமாள் இருக்கிறார். அவரை பார்க்கதான் சென்றோம். நடந்து செல்லும்பொழுது நமது அம்மன் சும்மா விடுமா முதலில் என்னை பார்த்துவிட்டு செல்லுடா என்று சொல்லாமல் எனது உறவினர் வழியாக சொல்லியது பெருமாள் கோவிலுக்கு முன்பாகவே ஒரு மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. சரி அம்மனை பார்த்துவிட்டு செல்லுவோம் என்று சென்றேன். அம்மனை பார்த்துவிட்டு அம்மனை சுற்றிவந்தால் பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கின்றார். சரி சென்னையில் இங்கு தான் இவரை முதலில் பார்க்கிறோம் என்று எண்ணி அவருக்கு ஒரு நெய்தீபம் ஏற்றினேன்.
அங்கு தரிசனம் முடிந்த பிறகு நேராக பெருமாளை பார்க்க சென்றுவிட்டோம். அந்த காலத்தில் உள்ளது போல் கோவில் தெருக்கள் உள்ளன. பெருமாள் கோவில் தெரு என்று சொல்லுகிறார்கள். பெருமாளை பார்த்தேன். அப்படி ஒரு தரிசனம். எங்கேயோ இருக்கின்ற என்னை. என்னை வந்து பாருடா என்று அழைத்த அந்த கரிகிருஷண பெருமாளை பார்க்க கண்கள் கோடி வேண்டும்.
என்னிடம் தேடி வருபவர்களுக்கு சொல்லுவது எல்லாம் என்னை ஏன் தேடுகின்றீர்கள். இப்படி ஒரு தரிசனத்தை கண்களால் பார்த்தாலே போதுமே. அப்புறம் எதற்கு ஸ்பார்க். பல ஜென்மத்திற்க்கு இது போதுமே. நன்றாக தரிசனம் செய்துவிட்டு நான் திரும்பி வந்தேன்.
ஜாதககதம்பத்தில் நன்றாக படங்களை தேர்வு செய்து போடுவது கூட அந்த தரிசனத்தை பார்த்து நீங்கள் இந்த பிறவியில் புண்ணியத்தை பெறவேண்டும் என்பதற்க்காக மட்டுமே. உங்களுக்கு ஆன்மீகம் வரவேண்டும் என்றால் முதலில் தரிசனம் செய்வதை முதலில் கடைபிடிக்கவேண்டும். அப்படியே அவரை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அதன் பிறகு அத்தனையும் உங்களுக்கு நடைபெறும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment