Followers

Friday, September 27, 2013

ஆன்மீக அனுபவங்கள் 117


ணக்கம் நண்பர்களே!
                     நேற்றைய ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு என்னிடம் கேட்டார்கள். எப்படி இதனை செய்வது என்று கேட்டார்கள். அவர்களுக்காக இந்த பதிவு.

நாம் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து நமது உடலில் மற்றும் மனதில் என்ன நடக்கிறது என்று உற்று நோக்கினாலே ஒரளவுக்கு புரிந்துவிடும். தனிமையில் அமர்ந்து பரிசோதனை செய்யும்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒன்று தோன்றும். அதனை வைத்து தான் அனைத்தும். உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். தனிமையில் இப்பொழுது மனித்ன் அமருவது கிடையாது. அப்படியே தனிமையில் மனிதன் அமர்ந்தாலும் அவன் பிரமன் படைக்காத உடலோடு ஒட்டிக்கொண்டு இருக்கின்ற ஒரு உறுப்போடு தான் அவன் இருக்கின்றான்(செல்போன்). பின்பு எப்படி சாத்தியப்படும்.

குருவின் வழியாக தான் அனைத்தும் நம்மால் பயிலமுடியும். குரு இல்லை என்றால் நம்மால் எதுவும் செய்யமுடியாது. ஒரு குருவை நாடி கற்றுக்கொள்ளுங்கள். என்னை பொறுத்தவரை எனக்கு சாமியார்கள் நண்பர்கள் தான் அதிகம். தினமும் ஒரு சாமியாராவது என்னை பார்த்துவிடுவார் அல்லது அவர்களை தேடி நான் சென்று பார்த்துவிடுவேன்.

உங்களின் வேலையில் இருக்கும் நண்பர்களை நீங்கள் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வீர்கள் என்னடா வேலை எப்படி போய்கொண்டு இருக்கின்றது. வேலையில் உள்ள பிரச்சினைப்பற்றி பேசுவீர்கள். ஜாலியாக கூட பேசிக்கொள்ளலாம். நான் சந்திக்கும் சாமியார்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள் தான் உங்களைபோல் தான் நாங்களும் பேசிக்கொள்வோம். எங்களின் வேலை எப்படி போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வேலையிலும் ஏற்பட்ட பிரச்சினை அல்லது அதனை எப்படி செய்வது இது தான் நாங்கள் பேசிக்கொள்வது.

ஒருவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் அவர்களின் நட்பு வட்டத்தை பார் என்று சொல்லுவார்கள். அதேப்போல் தான் நாம் எவருடன் பழக்கம் வைத்துள்ளோமே அவர்கள் வழியாக கற்றுக்கொள்கிறோம். அவர்களின் பழக்கம் நமக்கு தொற்றிக்கொள்ளும். 

இது எல்லாம் பல வருடங்கள் தேடி கண்டுபிடித்த விசயங்கள். உங்களின் தேடுதல் இதனை நோக்கி இருக்கும் என்றால் கண்டிப்பாக கடவுள் உங்களுக்கு வழிகாட்டுவார். அந்த வழிகாட்டுதலோடு நீங்கள் சென்றால் அனைத்தையும் கற்றுக்கொள்ளமுடியும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Anonymous said...

இந்த சூட்சுமஉடல் தந்திரத்தை ஒருவர் கற்று
அதைத் தவறாகப் பயன்படுத்தினால் ?
பாதிக்கப்படுபவருக்கு என்ன தீர்வு ?
என்னைப் பொறுத்த வரையில் அனைவரும் இதைச் செய்வது கடினமே .ஆத்மா பலமாக இருக்க வேண்டாமா இதற்கு ?

rajeshsubbu said...

வணக்கம் மேடம் நீங்கள் சொல்லுவது போல் வாய்ப்பு உண்டு. இதனை செய்பவர்கள் மிககுறைவுதான். தடுப்பவர்கள் வேறு யார் நமது பூர்வ புண்ணியம் மட்டுமே. ஆத்மாவின் பலம் அதிகரிக்க பல வழிகளை நம்முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள் அதனை பின்பற்றினால் போதுமானது ஒன்று. அனைவராலும் செய்யமுடியும். பயிற்சி மற்றும் குரு அவசியம் தேவை. நன்றி