வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவைப்பற்றி பார்த்து வந்தோம். அதில் சுயபுத்தி எப்படி இருக்கும் என்பதையும் பார்த்தோம். சுயபுத்தியில் மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
ராகு ஆறு எட்டு பன்னிரண்டிலோ தீய கிரகங்களின் பார்வையிலோ அல்லது தீயகிரங்களின் சேர்க்கையில் இருந்தால்
கடன் தொல்லை ஏற்படும். எதிரிகளின் வழியில் பிரச்சினை ஏற்படுத்துவார். திருடர் பயம் ஏற்படும். நீங்கள் வேலை செய்துக்கொண்டிருக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும். நீங்கள் வேலைக்கு போகும் ஊரும் உங்களுக்கும் ஒற்றுவராது.
புத்திரர்கள் வழியில் பிரச்சினை, தனங்கள் விரையம் ஆகுதல் அரசாங்க வழியில் பிரச்சினையை சந்தித்தல், மாற்று மதத்தினர் வழியாக பிரச்சினையை சந்தித்தல் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தால் அதில் நாசம் ஆகுதல் மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தி தருதல் வேறு நாடுகளுக்கு செல்லுதல் மனக்கவலை ஏற்படுத்தல் போன்றவை ராகுவின் சுயபுத்தியில் நடைபெறும்.
எந்த ஒரு சுயபுத்தியும் அதிகமான பலனை தருவதில்லை அதேபோல் அதிகமான கெடுதலையும் தருவதில்லை. ஏதோ சுமாராக வாழ்க்கை செல்லும்.
ராகு தசாவின் சுயபுத்திக்கு பரிகாரம்
துர்க்கைக்கு செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் பூஜைக்கு உங்களால் இயன்றதை வாங்கி தரவும் அப்படி இல்லை என்றால் பூஜையில் கலந்துக்கொள்ளவும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
5 comments:
வணக்கம், ராகு நீச நிலையில் இருந்து நல்ல பார்வையும் இல்லாமல் இருந்தால் அவரின் செயல்பாடு எப்படி இருக்கும். நன்றி.
வணக்கம் அதனைப்பற்றி வரும் பாடங்களில் பார்க்கலாம். நன்றி
Nice information.
Rahu in 10th house(aries) and rahu dasa is running.
How will be the impact Sir?
வணக்கம் Udhayaganesh உங்களின் முழுஜாதகத்தை அனுப்புங்கள். பார்க்கலாம்.
நன்றி சார்
Post a Comment