வணக்கம் நண்பர்களே!
இந்த மாத அம்மன் பூஜைக்கு என்று சென்று வந்தபொழுது ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். அதனை சொல்லவேண்டும் என்று நினைத்தேன் அதற்க்கான நேரம் இப்பொழுது தான் வந்தது.
எனது ஊருக்கு அருகில் ஒரு ஊர் இருக்கின்றது அந்த ஊரில் ஒரு பிரபல சோதிடர் இருந்தார். அவரிடம் சோதிடம் பார்க்க டோக்கன் போடவேண்டும் அந்தளவுக்கு பிரபலமானவர். காலையில் சென்றாலே அவரை பார்ப்பதற்க்கு நான்கு மணி நேரம் ஆகும். அப்படிப்பட்டவர் கடந்த முறை ஊருக்கு சென்றபொழுது பிளக்ஸ் போர்டில் இரங்கல் செய்தியை பார்த்தேன்.
அவர் எப்படி இறந்தார் என்று விசாரித்தால் தற்கொலை செய்துக்கொண்டார் என்று செய்தி கிடைத்தது. புகழ் பெற்ற சோதிடராக இருந்து பலன் சொல்லியவர்க்கு நேர்ந்த மரணத்தை எண்ணினால் வியப்பாக இருக்கின்றது.
பிறரின் கர்மாவை பார்ப்பவனுக்கு அந்து கர்மாவின் தாக்குதல் சிறிதளவாவது இருக்கும்.அந்த கர்மாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்கமுடியவில்லை என்னும்பொழுது தான் வருத்தப்படவைக்கிறது. எப்பொழுதும் தன்னை ஒருவன் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். பிறகு தான் அடுத்தவர்களை காப்பாற்றவேண்டும்.
பொதுவாக சோதிடம் பார்ப்பவர்களின் குடும்பம் சுபிட்ஷமாக இருக்காது என்பார்கள் அதற்கு காரணம் பல வீட்டு கர்மாவை நாம் பார்ப்பதால் தான் அப்படி நிகழ்கிறது. உடல்கட்டு என்ற ஒன்றை போட்டுக்கொண்டால் நாம் இந்த கர்மாவின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இப்பொழுது உள்ள சோதிடர்கள் பல பேர் கல்லூரியில் படித்துவிட்டு சோதிடம் சொல்லுவதால் அவர்களுக்கு உடல்கட்டைப்பற்றி தெரியவில்லை. இந்த சோதிடரும் கல்லூரியில் படித்தவர் தான்.
சோதிடத்தை படியுங்கள் தவறு இல்லை ஆனால் தன்னை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் அதனால் நீங்கள் உடல்கட்டு போட்டுக்கொண்டு சோதிடம் சொல்லுங்கள். தனக்கு பிறகு தான் அடுத்தவர்களுக்கு அதனை புரிந்துக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
ஐயா! உடல்கட்டு எப்படி போடுவது? விளக்கமாக சொல்லுங்களேன்.
வணக்கம் உடல்கட்டு என்பது பழைய பதிவுகளில் சொல்லியுள்ளேன். தேடினால் கிடைக்கும். தகுந்த குரு உங்களுக்கு போட்டுவிடுவார். நன்றி
Post a Comment