Followers

Sunday, September 15, 2013

ஆன்மீக அனுபவங்கள் 112


வணக்கம் நண்பர்களே !
                    ஆன்மீக அனுபவத்தில் ஒரு வித்தியாசமான ஒரு கருத்தைப்பற்றி பார்க்கலாம். ஒரு சில இடங்களில் கொலை நடக்கும். இந்த கொலையை செய்தவர்கள் யாருக்கும் தெரியாமல் செய்துவிட்டு போய்விடுவார்கள். பிறகு துப்பு துலக்கி கண்டுபிடிப்பார்கள். 

யாருக்கும் தெரியாமல் கொலை செய்தாலும் அந்த கொலை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பார்கள். உண்மையில் காவல்துறையினர்கள் சொல்லுவது கொலை செய்தவர்கள் ஒரு தடயத்தையாவது விட்டு விட்டு செல்வார்கள் அதனை வைத்து கண்டுபிடித்துவிடுவோம் என்பார்கள். இவ்வளவு தெளிவாக திட்டம் போட்டு கொலை செய்பவர்கள் ஒரு தடயத்தை விட்டுவிட்டு செல்வது எப்படி நடக்கிறது என்று சிந்தனை செய்து பார்த்தால் அங்கு ஒரு உண்மை தெரியும்.

கொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா தான் ஒரு தடயத்தை விட்டுவிட்டு செல்ல வைக்கிறது என்பது ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். கொலை செய்பவர்கள் நாம் தான் கொலை செய்கிறோமே யார் வந்து காட்டிக்கொடுப்பார்கள் என்று நினைத்து செய்தாலும் அவனின் உடலை தான் செய்கிறார்களே தவிர அவனின் ஆத்மாவை ஒன்றும் செய்வதில்லை. அந்த ஆத்மா அவர்களிடம் எதாவது ஒன்றை விட்டுவிட்டு செல்லவைக்கிறது.

ஆத்மா தான் இருந்த உடலை காயப்படுத்துகிறார்கள் என்று எண்ணி இந்த வேலையை செய்கிறது. கொலை செய்தவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள். இதில் ஒரு சோதிட உண்மையை சொல்லுகிறேன் பாருங்கள். அதாவது நாம் முன் ஜென்மத்தில் மிகப்பெரிய குற்றத்தை செய்திருந்தால் நமக்கு ராகுவின் தோஷம் ஏற்படும். இந்த ராகு நமது கிரகத்தில் பித்ரு தோஷமாக காட்டுவார். கொலை செய்யும்பொழுது போலீஸ் துப்பு துலக்குவது கூட ராகுவின் வேலை தான். அதில் அவர்கள் மாட்டவில்லை என்றால் நமது ஜாதகத்தில் அதே ராகு தோஷமாக அமர்ந்து படுத்தி எடுத்துவிடுவார்.

நமக்கு என்ன நேர்க்கிறது என்பதை நமக்கு தெளிவாக உற்று நோக்கி கொண்டிருக்கிறது நமது ஆத்மா.நாம் அடுத்தவர்க்கு கெடுதல் செய்தாலும் அதே ஆத்மா நம்மை பார்த்துக்கொண்டிருக்கும்.

நாம் யாருக்கும் தெரியாமல் தீங்கு செய்துவிட்டு வந்துவிட்டோம் என்று மட்டும் நினைத்துக்கொண்டு ஜாலியாக வாழலாம் என்பது மட்டும் ஒரு நாளும் நடக்காது. நாம் செய்த தீமை நம் முன் வந்து நிற்க்கும். என்ன காலங்கள் மாறுபடும் அது மட்டும் தானே ஒழிய தண்டனை என்பது நிச்சயம் கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: