வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவில் குருபுத்தி 2 வருஷம் 4 மாதம் 24 நாட்கள் இதற்கு பலனை பார்க்கலாம். ராகு எங்கு இருந்தாலும் சரி லக்கினத்திற்க்கு கேந்திரம் திரிகோணம் தனது சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பூமியால் லாபம் ஏற்படும். வீட்டில் திருமணம் நடைபெறும். ராகு தசாவில் இந்த புத்தியில் மட்டும் தான் திருமணத்திற்க்கு அதிகவாய்ப்பை தருவார்.
பணவரவு வந்துக்கொண்டே இருக்கும். ராகு கெடுதல் வழியில் பணத்தை கொடுத்தாலும் குருவின் புத்தியில் நல்ல வழியிலும் பணத்தை கொடுப்பார். புதிய வாகனங்களை வாங்குவதற்க்கும் வழி செய்வார்.
ராகு சனி எல்லாம் பழைய வாகனங்களை வாங்குவதற்க்கு தான் வழி செய்வார்கள் ஆனால் ராகு தசா குருவின் புத்தியில் புதிய வாகனங்களை வாங்குவதற்க்கு வழி செய்து கொடுப்பார். பயணங்களை ஏற்படுத்திக்கொடுப்பார். அந்த பயணம் வழியாக உங்களுக்கு நல்லது நடக்கும்.
இந்த பயணமும் மேற்கு திசை அல்லது தென் மேற்கு திசையில் அமைவதற்க்கு வாய்ப்பு உண்டு. மேற்கு திசையில் சாதாரணமாக ஒரு பயணம் செய்தால் அது கெடுதலை தரும் என்பார்கள். இந்த ராகு தசா குருவின் புத்தியில் இந்த திசை உங்களுக்கு நல்லதை நடத்திக்கொடுக்கும். இப்பொழுது எல்லாம் பயணம் செய்வதில் திசை எல்லாம் பார்ப்பது கிடையாது. சோதிடம் என்பதால் சொல்லியுள்ளேன்.
எடுக்கின்ற காரியங்களில் வெற்றி பெற்று தருவார். சாதாரணமாக செய்தால் கூட அது எளிதில் நடந்துவிடும். புண்ணிய நதியில் நீராடுவதற்க்கு வாய்ப்பு வரும்.யாத்திரையும் செல்வீர்கள்.
உங்களுடன் முன்ஜென்மத்தில் உள்ளவர்கள் வெளிநாட்டில் இருந்து அல்லது வெளிமாநிலங்களில் இருந்து வந்து உங்களை சந்திப்பார்கள்.குரு என்பது பூர்வபுண்ணியத்தை காட்டும் கிரகம் என்பதால் முன்ஜென்மத்தில் உள்ளவர்கள் உங்களை நாடி வருவார்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment