வணக்கம் நண்பர்களே!
பல ஜாதங்களை நாம் பார்க்கிறோம். இதில் பல பேர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி எனது வாழ்க்கை போராட்டாக உள்ளது. எனது வாழ்க்கையில் அப்படி ஒரு கஷ்டத்தை நான் சந்திக்கிறேன் அல்லது சந்தித்து இருக்கிறேன் என்று சொல்லுவார்கள்.
இதற்கு அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் சரியில்லாமல் அமைவது தான் காரணம். ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகமாவது சொந்தவீட்டில் அமைந்தால் ஒரளவு அவர்களுக்கு வாழ்க்கை நன்றாக அமைந்துவிடும்.
லக்கினத்திற்க்கு அல்லது ராசிக்கு குருவின் பார்வை கிடைத்தால் அவர்களின் வாழ்க்கை போராட்டம் இல்லாமல் செல்லும். குரு பார்வை லக்கினத்திற்க்கு அல்லது ராசிக்கு கிடைக்கவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை போராட்டமாக அமைந்துவிடும்.
ஒரு சிலருக்கு நல்ல பணவசதி இருக்கும் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை ஏதோ ஒன்றை இழந்தது போல் இருக்கும்.அதற்கு காரணம் குரு கிரகம்.நமது முன்ஜென்மத்தில் நல்லது செய்தால் இந்த ஜென்மத்தில் நல்லது நடக்கும். பூர்வபுண்ணியத்தை காட்டக்கூடிய கிரகம் குரு. குருவின் வழியாக நமது லக்கினத்திற்க்கு ராசிக்கு புண்ணியம் கிடைக்கும்பொழுது வாழ்க்கை போராட்டம் இருக்காது.
குரு பார்வை கிடைக்காவிட்டால் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் உங்களின் வாழ்க்கை போராட்டாக அமையும் என்று சொல்லலாம்.வாழ்க்கை போராட்டமாக அமையும்பொழுது குருவின் காரத்துவத்தை அதிகரிக்க என்ன என்ன பரிகாரம் இருக்கிறதோ அதனை எல்லாம் செய்துக்கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளவும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment