Followers

Friday, September 6, 2013

காலபைரவர் விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    காலபைரவரை பற்றி ஒரு பதில் சொல்லிருந்தேன். அதற்கு ஒரு நண்பர் விளக்கம் தேவை என்று கேட்டுருந்தார்.

காலபைரவைப்பற்றி நிறைய எழுதியும் அனுப்பினர். அதனை நான் வெளியிடவில்லை. ஒவ்வொரு வழிபாட்டிற்க்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்காமல் அந்த தெய்வத்தின் அருளை பெறமுடியும் அதற்கு அவனின் ஆத்மா பலவாய்ந்த ஆத்மாவாக இருக்கவேண்டும். காளிக்கு இரத்தபலி கொடுப்பார்கள் அதே காளியை எந்த ஒரு நைவேத்தியம் இல்லாமல் வணங்கமுடியும் அதற்கு தேவை பலம் வாய்ந்த ஆத்மாவாக இருக்கவேண்டும்.

காலபைரவரின் ஆற்றலை பெறுவது எல்லாம் நன்மை தான். நன்மை இல்லை என்று சொல்லவில்லை. அதனை பெறுவதற்க்கு என்ன தேவையோ அதனை கொடுத்து தான் ஆகவேண்டும். எதனையும் கொடுக்காமல் பெறுவதற்க்கு சந்நியாசியாக இருந்தால் நல்லது. இல்லறத்தில் இருந்துக்கொண்டு செய்வது எல்லாம் நடக்ககூடிய செயல் அல்ல. யார்க்காவது அபூர்வமாக நடந்தால் மட்டுமே இது சாத்தியம்.

உங்களிடம் காலபைரவரை வணங்குபவர்கள் கெட்டார்கள் என்ற தகவல் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுருந்தார். நான் சான்றிதழ் எல்லாம் ஆன்மீகத்தில் தரமுடியாது. என்னுடைய அனுபவத்தில் நடந்தை சொல்லியுள்ளேன். எனது வார்த்தையை கேட்பவர்கள் கேட்கட்டும். இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.

காட்டில் சிங்கம் அதிகசக்தி வாய்ந்த விலங்கு அதனை விலங்கியல் பூங்காவில் வைத்து பார்க்கலாம். வீட்டில் வைத்து வளர்த்தால் பிரச்சினையை நீங்கள் எதிர்கொள்ளவேண்டியது உங்களின் வேலை. காலபைரவரும் அப்படி தான் கோவில் சென்று வணங்கலாம் வீட்டில் வைத்து வணங்குவது அவ்வளவு நல்லதல்ல.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Anonymous said...


சூரியன் ஆத்மகாரகன் தானே ..
அப்படி என்றால் ஒரு ஜாதகத்தில்
சூரியன் எந்த பாவத்திலும் [ 6 , 8 , 12 -ல் கூட ]
உச்சமோ ஆட்சியோ பெற்றால் அவர்
காளிதேவி , ப்ரத்யங்கிரா தேவி போன்ற
உக்கிர தேவதைகளை நைவேத்திய பொருள்
இன்றி வீட்டிலேயே படங்கள் வைத்து
வழிபடலாமா ?
காலபைரவர் விளக்கம் நன்று.
நன்றி !

இர.கருணாகரன் said...

மிகவும் சரியான விளக்கம் , நன்றி .

rajeshsubbu said...

//* இர.கருணாகரன் said...
மிகவும் சரியான விளக்கம் , நன்றி . *//

வணக்கம் தங்களின் வருகைக்கு நன்றி