Followers

Sunday, December 15, 2013

குரு தசா பலன்கள் பகுதி 22


ணக்கம் ண்பர்களே!
                    குரு கிரகம் எட்டாவது வீட்டில் நின்று குரு தசா நடைபெற்றால் எப்படி உங்களுக்கு பலனை தரும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

குரு கிரகம் நன்றாக இருக்கும்பொழுது நடைபெறும் தசாவால் எட்டாவது வீடு என்பது முன்னோர்களின் சொத்து மற்றும் உயில் வகைகளை காட்டும் இடம் அந்த வழியில் நல்ல நடக்கும். தந்தையின் செலவை காட்டும் இடம் என்பதால் அவர் உங்களுக்காக பணத்தை கொடுப்பார். ஏதோ நல்லது செய்துக்கொள்ள பணம் கொடுக்ககூடும்.

உங்களின் துனணவர் வழியாக நல்லது உங்களுக்கு பணம் வரும் மற்றம் உங்களின் தொழில் கூட்டாளிகள் உங்களுக்கு பணம் கொடுத்து உதவகூடும். ஆயுள் நன்றாக இருக்கும்.

எட்டாவது வீட்டில் குரு இருந்து தனது ஐந்தாவது பார்வையால் பனிரெண்டாவது இடத்தை பார்க்கிறார் உங்களுக்கு சுபசெலவை ஏற்படு்த்துவார். ஒரு சிலருக்கு வீடுகட்டி குடிபோகும் பாக்கியம் கூட இருக்கும்.

பனிரெண்டாவது  வீட்டை பார்ப்பதால் ஒரு சிலருக்கு முன்னோர்களின் சொத்துகளை வாங்குவார்கள் . தன்னுடைய முன்னோர்கள் பிறருக்கு விற்று இருப்பார்கள். அவர்களின் நினைவாக அந்த சொத்தை இவர்கள் வாங்ககூடும்.

குரு கிரகம் எட்டாவது வீட்டில் இருந்து ஒன்பதாவது பார்வையில் நான்காவது வீட்டை பார்ப்பார். வாகனங்கள் வாங்குவார்கள். ஒரு சிலர் புதிய வீடுகள் கட்டுவார்கள். சுகமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கும்.

குரு கிரகம் கெட்டு எட்டாவது வீட்டில் இருந்து தசா நடைபெறும்பொழுது வேலை சொன்ன நல்லவைக்கு எதிராக நடைபெறும். வாகனங்களில் செல்லும்பொழுது கவனமாக செல்லவேண்டும். நிறைய அவமானங்களை தந்துவிடுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: