வணக்கம் நண்பர்களே!
ஒரு வருடத்திற்க்கு ஒரு முறையாவது கர்மாவின் தாக்குதலுக்கு ஆளாகவேண்டும் என்பது எழுதபடாதவிதி். நேற்று காலையில் எழுந்தேன். காலையில் எழும்பொழுது சிறிய தலைவலி இருந்தது. இது ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சிறிய நேரம் உட்கார்ந்துக்கொண்டே இருந்தேன். தலைவலி அதிகமாக சென்றது. ஒரு மாத்திரை எடுத்து போட்டுவிடலாம் என்று நண்பரிடம் சொன்னவுடன் ஒரு மாத்திரை எடுத்துவந்து கொடுத்துதான் அதனை போட்டுவிட்டேன்.
அலுவலகத்திற்க்கு வந்து பதிவை ஒன்றை எழுதிவிட்டு வாடிக்கையாளர் ஒருவர் பேசினார். அடுத்த வாடிக்கையாளர் பேசும்பொழுதே பிரச்சினை அதிகமாகிவிட்டது. உடனே அவரிடம் நாளை பேசிக்கொள்ளலாம் என்று முடித்துவிட்டு அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டிற்க்கு சென்றுவிட்டேன். சும்மா சொல்லசு்கூடாது பிச்சி எடுத்தது கர்மாவின் தாக்குதல் என்றால் அப்படி ஒரு தாக்குதல்.
அம்மனை வைத்து தடுக்கலாம் எதற்கு தடுத்து அதனை சேமித்து வைப்பானே என்று விட்டுவிட்டேன். நாம் எப்படி அடிப்பட்டாலும் இரண்டு நாட்களுக்கு மேல் படுக்கையில் படுக்கவிடாது. பழைய நிலைக்கு அதுவாகவே திரும்பிவந்துவிடும். கர்மா நம்மை தாக்கும் ஆனால் உயிரை அதுவால் எடுக்கமுடியாது. நாம் நினைத்தால் மட்டுமே அது சாத்தியப்டும்.
இன்றைக்கு ஒரளவுக்கு பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்புகிறது. எந்த ஒரு மனிதனும் தன்னுடைய கர்மாவை அனுபவிக்கதான் நினைப்பான்.தவிர்க்கமாட்டான். நான் சொல்லுவது ஆன்மீகவாதிகளை சொல்லுகிறேன். நிறைய பதிவுகள் வரும் என்று எதிர்பார்த்து வந்திருப்பீர்கள். இனி தொடர்ந்து பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment