Followers

Thursday, December 19, 2013

குரு தசா பலன்கள் பகுதி 26


வணக்கம் நண்பர்களே !
                    குரு தசா பலன்களைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு கிரகம் பதினோராவது இடத்தில் நின்றுக்கொண்டு தசாவை நடத்தினால் எப்படி பலனை தரும் என்பதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

குரு கிரகம் நன்றாக இருந்து தசா நடைபெற்றால்

லாபஸ்தானத்தில் இருந்து தசா நடைபெறுவதால் மிகப்பெரிய அளவில் லாபத்தை பார்க்கமுடியும். நீங்கள் செய்யும் வேலையில் அல்லது தொழிலில் நல்ல லாபம் வரும்.  மூத்த சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். நண்பர்கள் வழியிலும் நன்மை நடைபெறும்.

குரு கிரகம் பதினோராவது வீட்டில் இருந்து ஐந்தாவது பார்வையாக மூன்றாவது வீட்டை பார்க்கிறது தொலைதொடர்புகள் நன்றாக இருக்கும். தொலை தொடர்புகள் வழியாக சம்பாதிக்க முடியும். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வழியாக நல்லது நடக்கும். ஏஜென்சி தொழில் கைகொடுக்கும்.

குரு கிரகம் ஒன்பதாவது பார்வையில் ஏழாவது வீட்டை பார்ப்பதால் துணைவர் வழியில் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். துணைவர் வழியாக வருமானம் உங்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் நடத்தி வந்தால் அந்த தொழிலில் லாபத்தை இந்த தசாவில் நீங்கள் பெறமுடியும்.

குரு கிரகம் கெட்டு தசா நடந்தால் மேலே சொன்ன பலன்களுக்கு எதிராக நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: