வணக்கம் நண்பர்களே!
குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் சனிபுத்தியை பற்றி பார்த்து வருகிறோம். ஒரு உதாரண ஜாதகத்தை பார்க்கலாம். இந்த ஜாதகத்தின் லக்கினம் ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன் அதே இடத்தில் அமர்ந்து இருக்கிறது. கன்னி ராசியை உடையவர்.
இவருக்கு குரு தசா ஆரம்பித்தவுடன் நன்றாக இருந்தது. குரு தசாவில் சனிபுத்தியில் இவர் மிகப்பெரிய பிரச்சினையில் மாட்டினார். உடல்நிலை பிரச்சினையில் மாட்டினார். லக்கினத்திற்க்கு பனிரெண்டில் சனி நின்றுக்கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் சனிக்கிரகம் நீசமாக இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் சனிக்கிரகம் நீசமாக இருந்தால் உடல்நிலையில் அதிகமாக பிரச்சினை ஏற்படும்.
குரு கிரகம் ஆறாவது வீட்டில் அமர்ந்து உள்ளது. குரு கிரகம் ஆறாவது வீட்டில் இருந்தால் பிரச்சினை தான். நோயை தரும் இடத்தில் குரு இருந்து தசா நடைபெற்றால் நோய் வருவது கண்டிப்பாக உறுதியாக சொல்லிவிடலாம்.
என்ன ஒன்று என்றால் சுயபுத்தியில் எதுவும் செய்யவில்லை ஒரு வேலை அது தயார் செய்துக்கொண்டு இருந்ததா என்று தெரியவில்லை சனி புத்தி வந்தவுடன் மருத்துவமனையில் படுக்கவைத்துவிட்டது. ஒரு பெரிய ஆப்ரேஷன் செய்து தான் காப்பாற்ற வேண்டியதாகிவிட்டது.
பல நாட்கள் மருத்துவமனையில் இருந்து வந்தார். சனிபுத்தி இவரைப்படுத்திவிட்டது. குரு கிரகத்திற்க்கு ஏழாவது வீட்டில் இருந்து சனிபுத்தியை நடத்தினாலும் அது ஆயுளுக்கு கண்டம் என்பது அல்லவா.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment