Followers

Monday, December 16, 2013

நீங்களும் சோதிடர்களே!


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் என்னிடம் சோதிடபலன் கேட்கும்பொழுது கடைசி கேள்வியாக ஒன்று கேட்பார்கள். அந்த கேள்வி நான் சோதிடம் கற்கலாமா என்று இருக்கும்.

இன்றைய தேதியில் இந்த மாதிரியான பதிவுகளை படிப்பவர்கள் அனைவரும் சோதிடதாகம் எடுத்து வந்து தான் படிக்கமுடியும். சோதிட தாகம் இல்லாமல் இந்த சைடு எல்லாம் ஒருவராலும் படிக்கமுடியாது. இன்றைய தேதியில் சோதிடம் ஆன்மீகம் எல்லாம் இளைஞர்களிடம் செல்வது ந்ல்லது மட்டுமே.

பல ஆன்மீகவாதிகள் எல்லாம் என்னிடம் சொல்லுவார்கள் இப்பொழுது எல்லாம் இளைஞர்கள் ஆன்மீகத்திற்க்கு வந்துவிட்டார்கள். இந்தியா இன்னும் கொஞ்ச காலத்தில் சித்தர்களின் பூமியாக இருக்கபோகின்றது. ஆன்மீகபூமியாக மாறபோகின்றது என்று சொல்லுவார்கள்.

எப்பொழுதும் எனக்கும் மற்ற ஆன்மீகவாதிக்கும் ஒற்று வராது. ஏன் என்றால் நான் கேட்கிற கேள்வியிலேயே ஓடி போய்விடுவார்கள். இளைஞர்கள் ஆன்மீகத்திற்க்கு வருவதற்க்கு நான் தடை செய்யவில்லை ஆனால் இந்த இளைஞர்கள் இவ்வளவு இளம்வயதில் வருகின்றனர் என்றால் அவர்களுக்கு இளவயதில் எப்படிப்பட்ட அடிவிழுந்திருக்கிறது என்று என் மனம் நினைக்கும்பொழுது வருத்தமாக இருக்கும்.

இவ்வளவு இளைய வயதில் மிகப்பெரிய அடியை வாங்கியிருக்கிறார்களே என்று எனக்கு தோன்றும். வாழ்க்கையில் அடிவிழாமல் யாரும் இந்த பக்கம் திரும்பிபார்க்கமுடியாது. 

தாகம் எடுத்து சோதிடத்தை படிக்கும்பொழுது எளிதில் தேறிவிடலாம். தாகம் இல்லாமல் சோதிடத்தை படித்து ஒன்றும் நடைபெறாது. ஒரு சிலர் கிரகங்கள் அங்கு இருக்கின்றது இங்கு இருக்கின்றது நீங்கள் சோதிடம் படிக்கமுடியும் என்று சொல்லலாம் ஆனால் நடைமுறையில் தன் வாழ்க்கை அதற்கு தயாராக இருக்கின்றதா என்று பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

உங்களுக்கு விரும்பம் இருந்தால் சோதிடத்தை நன்றாக படித்து கற்றுக்கொள்ளுங்கள். இதற்கு யாரும் ஒன்றும் சொல்லபோவதில்லை. தொழிலாக அல்லது பிறருக்கு சோதிடம் பார்க்கும்பொழுது மட்டுமே ஆப்பு என்பது வித்தியாசமாக நம்மை வந்து தாக்கும் இதனைப்பற்றி பழைய பதிவிலேயே சொல்லிருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: